வெள்ளி, பிப்ரவரி 26, 2021

districts

img

நியாயமான சம்பள உயர்வு கோரி பனியன் தொழிலாளர்கள் தொடர் முழக்கம்

திருப்பூர், பிப். 23-

திருப்பூரில் பனியன் தொழிலாளர்க ளுக்கு நியாயமான சம்பள  உயர்வு வழங்கும் வகையில் பனியன் உற்பத்தியாளர் சங்கங் கள் பேச்சுவார்த்தை  நடத்தி தீர்வு காண வலி யுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார் பில் தொடர் முழக்கப் போராட்டம் நடத் தப்பட்டது.

திருப்பூர் தியாகி குமரன் சிலை முன்பாக செவ்வாய்க்கிழமை மாலை இந்த போராட் டம் நடைபெற்றது. சிஐடியு பனியன் பொதுத் தொழிலாளர் சங்கப் பொதுச் செய லாளர் ஜி.சம்பத் தலைமையில் நடைபெற்ற இந்த தர்ணா போராட்டத்தில் ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் என்.சேகர், எல்பிஎப் தலைவர் க.ராமகிருஷ்ணன், ஐஎன்டியுசி செயலாளர் ஏ.சிவசாமி, எச்எம்எஸ் செய லாளர் ஆர்.முத்துசாமி, எம்எல்எப் செயலா ளர் மனோகரன் ஆகியோர் தொழிலாளர்க ளுக்கு உடனடியாக சம்பள பேச்சுவார்த் தையை நடத்தி நியாயமான சம்பள உயர்வு வழங்க உற்பத்தியாளர் அமைப்புகள் முன்வர வேண்டும் என்று வலியுறுத்திப் பேசினர்.

மேலும், இந்த தொடர் முழுக்கப் போராட் டத்தில் சிஐடியு பனியன் தொழிலாளர் சங்கத் தலைவர் சி.மூர்த்தி உட்பட அனைத்து சங்க நிர்வாகிகள் மற்றும் பெண் தொழிலாளர்கள் உள்பட சுமார் 300 பேர் பங்கேற்றனர்.

;