திருப்பூர், நவ. 27- தில்லி நோக்கி அணிவகுப்பை நடத்திய விவசாயிகள் மீது கடும் அடக்குமுறையை ஏவிய பாஜக அரசை கண்டித்து திருப்பூரில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது. திருப்பூர் தியாகி குமரன் நினைவகம் முன்பு வெள்ளிக்கிழமை நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலா ளர் செ.முத்துக்கண்ணன் தலைமை ஏற்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் விவ சாயிகள் விரோத, தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்மூடித்தனமாக அமல்படுத்தும் மத்திய அரசு, அந்த கொள்கைகளுக்கு எதிராக போராடும் உழைக்கும் மக்களை ஒடுக்கும் மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப் பப்பட்டன.
மேலும், தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்டச் செயலாளர் ஆர்.குமார், மோடி அரசின் தாக்குதல் நட வடக்கைகளை எதிர்த்து கண்டன உரை ஆற்றினார். சிஐடியு மாவட்டச் செயலா ளர் கே.ரங்கராஜ் நிறைவுரை ஆற்றி னார். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கம் எழுப்பினர்.