திருப்பூர், நவ. 24 - குன்னத்தூர் அருகே சுண்டக்காம் பாளையம் கிராமத்தில் உள்ள பால் உற்பத்தி யாளர் கூட்டுறவு சங்கத்தில் அப்பகுதி அருந் ததியர் மக்கள் பால் வாங்கவோ, சங்க உறுப் பினராகவோ முடியாத கொடுமை அரங் கேறு வருகிறது. இப்பிரச்சனையில் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து தீண்டாமைக் கொடுமையைக் களைய வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கோரியுள்ளது.
இதுகுறித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் திருப்பூர் மாவட்டத் தலைவர் ஆர்.குமார், மாவட்டச் செயலாலர் ச.நந்தகோபால் ஆகியோர் அளித்த மனு வில் கூறியிருப்பதாவது: ஊத்துக்குளி வட்டம், குன்னத்தூர் காவல் நிலைய எல் லைக்குட்பட்ட சுண்டக்காம்பாளையம் கிரா மத்தில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங் கத்தில் அருந்ததியர் மக்கள் உறுப்பினர்க ளாக முடியாத தீண்டாமைக் கொடுமை உள்ளது.
திருப்பூர் மாவட்ட ஆவின் நிர்வா கத்தின் கீழ் செயல்படும் அரசு நிறுவன மாக இந்த கிராம கூட்டுறவு பால் உற்பத்தி யாளர் சங்கம் உள்ளது. இங்குள்ள பால் விற்பனை மையத்தினுள் அருந்ததிய மக் களை அனுமதிப்பதில்லை. இந்தக் கூட்டு றவு சங்கத்தில் கறவை மாடு வைத்துள்ள அருந்ததியர் ஒருவரைக் கூட உறுப்பி னராக சேர்ப்பதில்லை.
இந்த விற்பனை மையம் தொடங்கிய நாள் முதல் இதுவரை இந்த தீண்டாமைக் கொடுமை தொடர்கி றது. பால் வாங்க சென்றால், வெளியே அருந்ததிய மக்களுக்கென்று உள்ள சன்னல் வழியாகத்தான் பால் வாங்கிக் கொள்ள வேண்டும். இதுகுறித்து கேள்வி எழுப்பி னால் அடாவடியாக பதிலளிக்கின்றனர். பால் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவரி டம் கேட்ட போது, தற்போது கொரோனா காலமாக இருப்பதால், எல்லோரும் வெளி யில் நின்று பால் வாங்கிச் செல்கிறார்கள்,” என்று சமாளித்தார்.
ஆனால், இன்று வரை அருந்திய மக்களை உள்ளே விடுவதில்லை. அத்துடன் கறவை மாடு வைத்துள்ள அருந்த தியர் பால் ஊற்றச் சென்றால், விரட்டி விடு கிறார்கள். அதனால், இன்றுவரை பால் விற் பனை நிலையத்தில், அருந்ததியர் ஒருவர் கூட உறுப்பினராக முடியவில்லை
எனவே, இதுதொடர்பாக நவ.23 ஆம் தேதி திங்க ளன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் மனு கொடுக்கலாம் என அப் பகுதி தீண்டாமை ஒழிப்பு முன்னணியைச் சேர்ந்த அ.தருமன் மக்களிடம் பேசி யுள்ளார்.
இத்தகவல் கிடைத்த சுண்டக்காம் பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் ஆனந்த் (எ) லோகநாதன், அருந்ததிய மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனுக் கொடுக் கச் செல்வதைத் தடுக்கும் வகையில், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலை வர் வி.டி.பழனிச்சாமி மற்றும் அருந்ததிய மக்கள் ஆகியோரை அழைத்து, சமரசப் பேச்சுவார்த்தை என்ற பெயரில் கட்டப் பஞ் சாயத்து செய்துள்ளார்.
அதன்படி, அனைத் துச் சமூகத்தினரும் பால் விற்பனை நிலை யத்திற்கு உள்ளே சென்று பால் ஊற்றவும், பால் வாங்கவும் உடன்பாடு எட்டப்பட்டுள் ளது என்று அறிவித்து, அனைவருக்கும் சுண் டக்காம்பாளையம் கிராம பொதுமக்கள் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக பேனரும் அடித்துக் கட்டியுள் ளார்.
எனவே, அங்குள்ள உண்மை நிலை குறித்து திருப்பூர் மாவட்ட நிர்வாகமும், ஆவின் நிர்வாகமும், காவல் துறையும் உரிய விசாரணை மேற்கொண்டு, அரசியல மைப்புச் சட்டத்துக்கு விரோதமாகத் தீண் டாமையைக் கடைப்பிடித்தவர்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தீண்டாமை ஒழிப்பு முன்னணி கேட்டுக் கொண்டுள்ளது.