திருப்பூர், ஜூலை 17- தாராபுரம் அருகே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் முறையாக அனைவருக்கும் வேலை வழங்குவதில்லை என மாவட்ட ஆட்சியரகத்தில் பெல்லம்பட்டி பகுதி மக்கள் புகார் மனு அளித்துள்ளனர்.
இதுக்குறித்து பெல்லம்பட்டி கிராம மக் கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்க ளன்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்ப தாவது, தாராபுரம் வட்டம் குண்டடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பெல்லம்பட்டி ஊராட்சியில் 3000த்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். இதில், 700க்கும் மேற் பட்டோர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணி செய்து வருகி றோம். சிறு விவசாய பூமி இருப்பதால் அனை வருக்கும் வேலை கொடுக்க ஊராட்சி மறுக் கிறது. 2024 – 2025 ல் ஒப்பந்ததாரர் அடிப்படை யில் குறைவான நபர்களுக்கு மட்டுமே வேலை கொடுக்கிறார்கள். இப்பகுதி மக்கள் ஊரக வேலை திட்டத்தை நம்பி தான் வாழ்வாதாரத்தை நடத் துகிறார்கள். மேலும், இப்பகுதியில் கடுமை யான குடிநீர் பஞ்சம் நிலவுகிறது. வாரத்திற்கு ஒரு நாள் மட்டும் குடி தண்ணீர் விநியோ கிக்கப்படுகிறது. அதுவும் 5 முதல் 10 குடம் மட்டுமே கிடைக்கிறது. ஒரு குடும்பம் இந்த தண்ணீரை வைத்து எப்படி ஒரு வாரம் சமா ளிக்க முடியும். எனவே எங்கள் பகுதியில் முறையாக குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்து இப்பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும். அதேபோல எங்கள் வாழ் வாதாரத்தை கருத்தில் கொண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத் தில் அனைவருக்கும் வேலை வழங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள் ளது.