districts

img

200 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உதயேந்திரம் பேரூராட்சிக்குட்பட்ட சுப்பராயன் கோவில் வட்டம் பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்பனை செய்து வருவதாக  கலால் ஆணையர் பானுமதி தலைமையில் நடத்திய அதிரடி சோதனை நடைபெற்றது. இதில் வசந்தா மோகன் என்பவரின் வீட்டில் பதுக்கி வைத்திருந்த சுமார் 200 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும் கள்ள சந்தையில் விற்பனை செய்வதற்காக 100க்கும் மேற்பட்ட அரசு மதுபான பாட்டில்கள் இருந்ததை கண்டு பிடித்து விசாரணை நடைபெற்று வருகிறது.