districts

img

மார்க்சிஸ்ட் கட்சியும் மக்களும் இணைந்து உறுதியாக நடத்திய போராட்டம் வெற்றி டாஸ்மாக் கடை இடமாற்றம்

திருநெல்வேலி, மே 20 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் விக்கிரமசிங்கபுரம் நகரக் குழு  செயலாளர் வி.இசக்கிராஜன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: திருநெல்வேலி மாவட்டம் விக்கிரம சிங்கபுரம் நகராட்சியின் பிரதான சாலை யில் (மெயின் ரோடு) சுமார் ஆறு ஆண்டு களாக செயல்பட்டு வந்த அரசு மதுக்கடை எண்:10743 அப்பகுதி பொது மக்கள், மாணவ- மாணவிகளுக்கு மிகவும் இடையூறாகவும் சிரமமாகவும் இருந்தது.  

இந்த மது கடை அருகில் உள்ள சாலைத்தெரு, கடையின் எதிரில் உள்ள தெருவின் வழியாகத் தான் ராமலிங்க புரம் 8 தெருக்களும், மீனாட்சிபுரம், பன்னிமாடசாமி கோவில் தெருக்கள் என 800 வீடுகளும், சுமார் 3500 பேரும் குடியிருந்து வருகின்றனர்.

மேலும் இப்பகுதியில் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் சுமார்  1500 மாணவ-மாணவிகள் பயின்று வரு கிறார்கள். பொதுமக்கள் அனைவரும் தங்களின் அன்றாட அனைத்து தேவை களுக்கும் இந்த கடையைத் தாண்டித் தான் பயணிக்கிறார்கள். மேலும் அங்கு  கடை வைத்திருக்கும் வியாபாரிகள், எந்தநேரம் என்ன நடக்கும் என தினமும் அச்சத்துடன் மேற்படி பிர தான சாலையை பயன்படுத்தி வரு கிறார்கள். மதுபானக் கடையில் மது வாங்கி  இந்த தெருவிலேயே மது அருந்து கின்றனர்.

அவர்களுக்குள் சண்டை யிட்டு கொண்டு தெருவிலேயே பாட்டில் கள் உடைத்துப் போடுகின்றனர். இதனால் பல காயம்பட்ட நிலையும், குறிப்பாக மாணவ-மாணவிகள், குழ ந்தைகளுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.  பெண்கள் நடந்து செல்லும்போது சில விரும்பத்தகாத செயல்களும் நிகழ்கின்றன.  இதை அறிந்த அப்பகுதி பெண்கள் ஜெயா, கிருஷ்ணவேணி, மணிமாலா, தமிழரசி, முத்துலெட்சுமி, செண்பகம், மேகலா, சாந்தி பகவதி, பிரசாத், சுப்பையா உட்பட 30 பேர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை அணுகினர்.

உடனடியாக கட்சியின் தோழர்கள் அப்பகுதி பெண்களை சந்தித்தனர்.  அவர்களிடம் அரசு மதுக்கடையை இடமாற்றம் செய்வதற்கான போராட்ட த்தை முன்னெடுத்து நடத்தவும், எங்கள் பகுதி மக்கள் அனைவரும் இணைந்து போராட்டத்தை நடத்தி வெற்றி பெறுவோம் என கூறினர். அப்பகுதி மக்கள் பங்கேற்புடன் மாபெரும்  ஆர்ப்பாட்டத்தை மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட கட்சி நடத்தி யது. காவல் துறையின்கெடுபிடிகளுக்கு மத்தியில், போராட்டத்தில் 280 பெண்கள் உட்பட 400 பேர் கலந்து கொண்டனர்.

 தகவலறிந்த அம்பாசமுத்திரம் வரு வாய் வட்டாட்சியர், மறுநாளே அப்பகு தியை பார்வையிட்டு அறிக்கை அளித்தார். காவல் துறையும், இப்பகுதி பிரச்சனைகளை ஆய்வு செய்து அறிக்கை அளித்தது.  எனினும் மதுக்கடையை இட மாற்றம் செய்ய காலதாமதம் ஆனதால் அப்பகுதி மக்கள், மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில், மீண்டும் 2023 செப்.12-இல் முற்றுகைப் போராட்டம் நடத்த முடிவு செய்து அதன் நகலை முதல மைச்சர் முதல் அரசுத் துறை அனைத்து அதிகாரிகளுக்கும் அனுப்பினர்.

செப்.12 அன்று தமிழ்நாடு அரசு வாணிபக் கழக மேலாளருடன் நடந்த சந்திப்பில் 1 மாத கால அவகாசத்தில் கடையை இடமாற்றம் செய்வோம் என உறுதியளித்ததின்பேரில் முற்றுகைப் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.  மீண்டும் மார்ச் 19 இல் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. முற்றுகை போராட்டத்தில் கலந்துகொண்ட அனைவரையும் கைது செய்ய காவல்து றை முயன்றபோது பெண்கள் தாமா கவே முன்வந்து முதலில் எங்களை  கைது செய்யுங்கள் என ஆவேசத்து டன் கூறினர்.

இந்நிலையில் 10 நாட்களில் கடையை இடமாற்றம் செய்வோம் என  உறுதியளித்தனர். அதன்பேரில் அன்றும் முற்றுகை போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள் தொடர்ந்து மேலாளருடன் பேசியும் சந்தித்தும் வந்த நிலையில், மே 14 அன்று மதுக்கடை இட மாற்றம் செய்யப்பட்டது.

இது 9 மாத கால போராட்டத்திற்கு அப்பகுதி பெண் களின் உறுதியான நிலைப்பாட்டிற்கு கிடைத்த வெற்றியாகும். இவர்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அம்பை ஒன்றியச் செய லாளர் ஜெகதீஸ், முருகன், பாலு, சுப்பா ராஜ், சங்கர், ரவீந்திரன், முத்து கிருஷ்ணன், தளவாய் உள்ளிட்டோர் இப்போராட்டங்களில் பங்கேற்றனர்.  அவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவிக்கும் வகையில், அப்பகுதி மக்களை சந்திக்கச் சென்ற கட்சியின் தலைவர்களுக்கு பெண்கள் கை கூப்பி நன்றி கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.