திருநெல்வேலி,செப்.6- வ.உ.சிதம்பரனார் மணி மண்டபத்தில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டுமென தமுஎகச நெல்லை மாவட்டக்குழு தமிழக அரசையும், மாவட்ட நிர்வாகத்தையும் வலி யுறுத்தியுள்ளது. வ.உ.சிதம்பரம் 151 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு திங்களன்று தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர் கலைஞர் சங்கம் சார்பில் கிருஷி தலைமை யில் மாவட்ட செயலாளர் வண்ணமுத்து, நிர்வாகிகள் நாராயணன், சண்முகம், ஓவியர் செல்வம், பழநி சுப்பிரமணியம், பத்திரிகை எழுத்தாளர் மா, கண்ணன், பேரா சிவமதின் ஆகியோர் வஉசி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கோரிக்கைகள்
வ.உ.சி. மணிமண்ட பத்தில் குடிநீர் இணைப்பு இல்லை, தற்காலிக சின் டெக்ஸ் தொட்டிக்கு தண்ணீர் லாரி மூலம் வழங்கப்படு கிறது. நிரந்தர குடிநீர் இணை ப்பு மூலம் தண்ணீர் வழங்க வேண்டும், மாணவர், இங்கு உள்ள நூலகத்திற்கு அரசு பணி தேர்வுக்கு படிப்பதற்காக வந்து செல்கின்றனர். அவர்களுக்கு கழிப்பறை வசதி சரியாக இல்லை. சுற்றுப்புறச் சுவர் இடிந்த நிலையில் உள்ளது. அதை உடனடியாக சரி செய்திட வேண்டும் போன்ற கோ ரிக்கையை தமிழக அரசு, நெல்லை மாவட்ட நிர்வாகம் ஆகியவை உடனடியாக செய்து தரும்படி தமுஎகச வலியுறுத்தியுள்ளது.