திருநெல்வேலி,ஜூன் 4 நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் 5,02,296 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இவருக்கு அடுத்தப்படி யாக வந்த பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் நயினார் நாகேந்திரனை விட இவர் ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 620 வாக்குகள் வித்தியாசத் தில் வெற்றி பெற்றுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் 3, 36 ஆயிரத்து 676 வாக்குகளும் அதிமுக வேட்பாளர் ஜான்சி ராணி 89 ஆயிரத்து 601 வாக்குகளும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சத்யா 87 ஆயி ரத்து 686 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதில் தபால் ஓட்டுக்களும் அடங்கும்.