மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட மூத்த தலைவரும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவருமாகிய என்.செல்லதுரை இல்ல திருமண விழா பெரம்பலூர் ஜே.கே. திருமணமஹாலில் ஞாயிறன்று நடைபெற்றது. மணமக்கள் எஸ்.பாரதி-எம்.ரம்யா திருமணத்தை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமை வகித்து நடத்தி வைத்தார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ் முன்னிலை வகித்தார். மாதர் சங்க மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் பி.சண்முகம், கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன், தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அருணன், சிபிஎம் மாநில கட்டுப்பாட்டுக்குழு எஸ்.ஸ்ரீதர், விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் சாமி.நடராஜன், பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநிலத் தலைவர் கே.முகமதுஅலி, பட்டிமன்ற நடுவர் கவிஞர் நந்தலாலா ஊராட்சிக்குழு தலைவர் சி.ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் மணமக்களை வாழ்த்தினர்.