திருவாரூர், ஜுன் 23- நன்னிலம் ஒன்றியத்தில் நூறு நாள் வேலையை உடனடியாக துவங்கிட கோரி, அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடைபெற்றது. கொல்லுமாங்குடியில் சனிக்கிழமை துவங்கி நன்னிலம் ஒன்றியத்தில் உள்ள 24 ஊராட்சி கிராமங்களில் பிரச்சாரம் நடை பெற்றது. பிரச்சார பயண குழுவிற்கு ஒன்றி யத் தலைவர் ஆர்.சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் சரவண சதீஷ்குமார் முன்னிலை வைத்தார். சிபிஎம் செயற்குழு உறுப்பினர் டி.வீரபாண்டியன் பிரச் சாரத்தை துவக்கி வைத்து உரையாற்றினார். நன்னிலம் ஒன்றியச் செயலாளர் கே.எம்.லிங்கம், விதொச பொருளாளர் ஏ.சங்கர் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். அனைத்து ஊராட்சிகளிலும் நூறு நாள் வேலையை வழங்கிட வேண்டும். நூறு நாள் வேலைக்கான அரசு அறிவித்த சம்பளம் ரூ.319 வழங்க வேண்டும். அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தையும் நியாய விலை கடையில் தட்டுப்பாடு இன்றி வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி பிரச்சாரம் நடைபெற்றது. பூந்தோட்டத்தில் மாவட்டச் செயலாளர் பி.கந்தசாமி நிறைவுரையாற்றினார். விதொச மாவட்டப் பொருளாளர் ஆறு.பிரகாஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.