districts

img

தொழிற்பயிற்சி நிலையங்களை மாணவர்களுக்கு அர்ப்பணித்தார் தமிழக முதல்வர்

திருவாரூர், ஜூலை 13-

    அரியலூர், திருவாரூர் மாவட்டங்களில்  அரசினர் தொழிற்பயிற்சி நிலைய கட்டி டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்களுக்கு அர்ப்பணித்தார்

   திருவாரூர் மாவட்டம், கோட்டூர் மற்றும்  நீடாமங்கலத்தில் உள்ள அரசினர் தொழிற்  பயிற்சி நிலையத்தில் ஆயத்த கட்டமைப்பு பணிமனை மற்றும் ஆய்வகத்தை முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இதன் மொத்த மதிப்பீடு தலா ரூ.373.00 லட்சம்.  

    திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஆட்சியர் தி.சாருஸ்ரீ குத்து விளக்கு ஏற்றினார், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பி னர் க.மாரிமுத்து, மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனாமணி, கோட்டூர் ஒன்றியக்குழுத்தலைவர் மணிமேகலை, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மஞ்சுளா, கோட்டூர் அரசு தொழிற் பயிற்சி நிலைய முதல்வர் ராஜேந்திரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்பின் பிரதி நிதிகள் கலந்து கொண்டனர்.  

அரியலூர்

     அரியலூர் ஆண்டிமடம் அருகே கூவத்  தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 34.65 கோடி மதிப்பீட்டில் டாட்டா டெக்னால ஜிஸ் நிறுவனத்துடன் 4.0 இணைந்து அமைக்  கப்பட்டுள்ள தொழில் நுட்ப மையத்திற் காக கட்டப்பட்டுள்ள கட்டிடத்ரைத தமிழ்நாடு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.  

   கூவத்தூரில் நடைபெற்ற நிகழ்வில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். ஊராட்சி மன்றத் தலைவர் டேவிட் பொறியாளர் குபேரன் மற்றும் தொழிற்பயிற்சி பயிற்றுநர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.