புதுக்கோட்டை, ஜூலை 11-
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு திட்டப் பணி களை சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.
கந்தர்வகோட்டையில் அமுதம் பகுதி நேர அங்காடியினையும், நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் பகுதிநேர அங்காடியினையும், ரூ.5.3 லட்சம் மதிப்பில் புதிய மின் மாற்றியினையும் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் திறந்து வைத்தார்.
கந்தர்வகோட்டை, குமரன் காலனி யில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.10.19 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி கட்ட டத்தையும், வெள்ளாளவிடுதி அரசு உயர் நிலைப் பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.7 லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவர் பணியினையும், வெள்ளாளவிடுதி ஆரம்ப சுகாதார நிலை யத்தில் ரூ.5 லட்சம் மதிப்பில் கால்ஸ் நிறு வனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள வெளி நோயாளிகள் ஓய்வு அறையினையும், ஆரம்ப சுகாதார நிலைய நுழைவுவாயில் பெயர் பலகையினையும் அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்.
டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி ரத்ததான முகாம் மற்றும் மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்று கள் நடும் பணியினையும், நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.38.69 லட்சம் மதிப்பில் வேளாண்மை விரிவாக்க மையக் கட்டி டத்தையும் அமைச்சர் திறந்து வைத்தார்.
பின்னர், மங்களாகோவிலில் நடை பெற்ற விழாவில் நாடாளுமன்ற மாநி லங்களவை உறுப்பினர் மேம்பாட்டு நிதி யிலிருந்து ரூ.13 லட்சம் மதிப்பில் கட்டப் பட்ட பொது விநியோகக் கட்டடத்தையும் திறந்து வைத்து, வேளாண் பொறியியல் துறையின் சார்பில் 9 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.49 லட்சம் மதிப்பிலான கட னுதவி தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.
மேற்கண்ட நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமை வகித்தார். மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை, முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.