districts

img

இருசக்கர வாகன நிறுத்துமிடம், தங்குமிடம் அறந்தாங்கி காவல் நிலையத்தில் அமைப்பு

அறந்தாங்கி, பிப்.21-  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வர்த்தக சங்கம் நகர வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது.  அதன் அடிப்படையில் அறந்தாங்கி  காவல் நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் காவல் துறையினர் இருசக்கர வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கு ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் இருசக்கர வாகனம் நிறுத்தம் மற்றும் தங்குமிடம் அமைக்கப்பட்டது. அதை பயன்பாட்டிற்காத வர்த்தக தலைவர் ஆடிட்டர் ரெ. தங்கதுரை தலைமையில் காவல் துணை கண்காணிப்பாளர் ரவிக்குமார் திறந்து வைத்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர் கருணாகரன், வர்த்தக சங்க செயலாளர் க. சுரேஷ் குமார், பொருளாளர் ஹாரிஸ் முகமது, துணைத் தலைவர்கள் வி.ஜி. செந்தில்குமார் மற்றும் சலீம், முபாரக், முருகேசன், துணைச்செயலாளர்கள் கவுன்சிலர் காசிநாதன், தாமஸ், தீபக் வர்த்தக சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.