districts

img

தூத்துக்குடி இருசக்கர வாகனம் நிறுத்துமிடம்

தூத்துக்குடி, ஜூலை 2-

    தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் உள்ள இருசக்கர வாகனம் நிறுத்து மிடத்தை அமைச்சர் கீதா ஜீவன் ஆய்வு  செய்தார்.

    தூத்துக்குடி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது காமராஜர்  காய்கறி மார்க்கெட் இந்த மார்க்கெட் டுக்குள் 500க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் மொத்த வியாபாரம் இயங்கி  வருகிறது. இந்த மார்க்கெட்டில் தான் தூத்துக்குடி மாநகரம் அதனை சுற்றியுள்ள கிராம பகுதியில் உள்ள சிறிய கடைக்காரர்கள் வந்து காய்கறி  வாங்கி செல்வார்கள். ஜெயராஜ் ரோட் டில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மல்டி லெவல் பார்க்கிங் கட்டப்பட்டு கடந்த மாதம் திறக்கப்பட்டது.  

    இது திறக்கப்பட்டு மார்க்கெட் டுக்கு வரும் வியாபாரிகள் தங்களு டைய வாகனங்களை பார்க்கிங் ஏரியா வில் நிறுத்துமாறு மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படை யில் காய்கறி மார்க்கெட் முன்பு உள்ள நடைபாதையில் வாகனங்களை நிறுத்த மாநகராட்சி நிர்வாகம் தடை விதித்தது மாநகராட்சி பணியாளர்கள் அங்கு பணியில் இருந்து வாகனங் களை நிறுத்தக்கூடாது என்று அறி வுறுத்தி வந்தனர்.

    இந்நிலையில் ஞாயிறு காலையில் அமைச்சர் கீதா ஜீவன் காய்கறி மார்க்  கெட் முன்பு வாகனங்களை நிறுத்த  தடை விதிக்கப்பட்ட பகுதியை பார்வை யிட்டார் வாகனங்களை நிறுத்துவ தற்கு அதிகாரியுடன் ஆலோசனை செய்து கூறுவதாக சென்றுள்ளார். மார்க்கெட் வியாபாரிகள் நாளை முதல் மார்க்கெட் முன்புள்ள நடைபாதை யில் வாகனங்களை நிறுத்த அனுமதி கிடைத்து விடும் என்று கூறி வருகின்ற னர்.