districts

திருச்சி விரைவு செய்திகள்

தையல் கலை தொழிலாளர்  சங்க மாவட்ட பேரவை

திருவாரூர், மே 8- திருவாரூர் மாவட்ட தையல் கலை தொழிலாளர் சங்கத்தின்  13 ஆவது ஆண்டு பேரவைக் கூட்டம் திருவாரூர் வி.பி.கே.லாட்ஜ் கூட்ட அரங்கில் சனிக்கிழமை சங்கத்தின் கௌ ரவ தலைவர் டி.ஜெகதீசன் தலைமையில் நடைபெற்றது. இந்தப் பேரவையில் மாநில தலைவர் பி.சுந்தரம், சிஐடியு மாவட்ட செயலாளர் டி.முருகையன், மாவட்ட தலைவர் ஜி. பழனிவேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  பேரவையில், கடைகளை நடத்தும் தையல் கலை ஞர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கிட வேண்டும். வீடு சார்ந்த தையல் கலைஞர்களுக்கு இலவச தையல் மிஷின் வழங்கிட வேண்டும். தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்தம் செய்வதைக் கைவிட வேண்டும். பெட்ரோல், டீசல்,  கேஸ் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும். சமூக நலத் துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு சங்கங்களில் ஜனநாயக முறையில் தேர்தல் நடத்திட வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.  புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கௌரவ தலை வராக டி.ஜெகதீசன், தலைவராக ஜி.சரவணன், செயலா ளராக இரா.மாலதி, பொருளாளராக ஆர்.கலா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 


திருச்சி மாவட்ட எஸ்.பி. சைக்கிளில் சென்று ஆய்வு

திருச்சிராப்பள்ளி, மே 8 - திருச்சி மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களை குறைக்கவும்,  சாலை விபத்துகளை தடுக்கவும்  உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து காவல்நிலைய அதிகாரிகள் மற்றும்  காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் உத்தரவிட்டிருந்தார்.   இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் சனிக்கிழமை இரவு திருச்சி ராம்ஜிநகர், இனாம் குளத்தூர், மணப்பாறை உள்ளிட்ட காவல் நிலையங்களுக்கு சைக்கிளில் சென்று இரவு பணி மேற்கொள்ளும் காவலர்க ளுடன் கலந்துரையாடி ஆய்வு மேற்கொண்டார். மேலும் இரவு  10.30 மணிமுதல் அதிகாலை 4.30 மணி வரை திருச்சி மாவட்டத்தில் சுமார் 100 கி.மீட்டர் தூரம் சைக்கிள் பயணம் மேற் கொண்டு இரவு பணி காவலர்களுக்கு பல்வேறு இடங்க ளில் அறிவுரை வழங்கினார்.


பிளஸ் 2 தேர்வில் முதல் மதிப்பெண் பெறும் அரசுப் பள்ளி  மாணவர்களுக்கு ஊக்கப்பரிசு

தஞ்சாவூர், மே 8 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதி அரசுப் பள்ளி களில் இந்தாண்டு பிளஸ்-2 அரசு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களில், ஒவ்வொரு பள்ளியிலும் முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்குவதாக சமூக  ஆர்வலர்கள் அமைப்பு அறிவித்துள்ளது.  இதுகுறித்து அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் குமார வேல் கூறுகையில், “பேராவூரணி தொகுதியை சேர்ந்த, பேரா வூரணி அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளி, குருவிக் கரம்பை, ஆவணம், திருச்சிற்றம்பலம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இந்தாண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவியர்களில் ஒவ்வொரு பள்ளியிலும் முதல்  மதிப்பெண் பெறுபவர்களுக்கு ஊக்கப்பரிசாக ரூ.5 ஆயிரம்  வழங்கப்படும்.  மேலும் மருத்துவம், வேளாண்மை படிப்பில் சேருபவர் களுக்கு ஆண்டுதோறும் 5 ஆயிரம் வீதம் 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். சமூக ஆர்வலர்கள், முன்னாள் மாணவர்கள், தன்னார்வலர்கள் மூலமாக பரிசு வழங்கப்படவுள்ளது” என தெரிவித்துள்ளார். 


மின்மாற்றியை சரிசெய்யக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, மே 8 - புதுக்கோட்டை மாவட்டம் அண்டக்குளம் அருகே பழுத டைந்த மின்மாற்றியை சரிசெய்ய வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் அண்டக்குளம் பகுதியில் கடந்த  20 நாட்களுக்கும் மேலாக அங்கு உள்ள எஸ்எஸ்2 என்ற  விவசாய மின்சாரத்திற்கு பயன்படும் மின்மாற்றி பழுதடைந் துள்ளது. 5 முறை விவசாயிகளிடம் பணம் பெற்று, அந்த  மின்மாற்றியை சரி செய்தும் தொடர்ந்து அந்த மின்மாற்றி யில் பழுது ஏற்பட்டு வருவதால் மின்சாரம் தடைபட்டுள்ளதாக வும் அதனால் சாகுபடி செய்த நெல் பயிர்கள் நீரின்றி கருகி  வருவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளுக்கு முறைப்படி தகவல் கொடுத் தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டி அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கருகிய பயிர்களுடன் அண்டக்குளம் அருகே புதுக்கோட்டை செங்கிப் பட்டி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற உடையாளிப் பட்டி போலீசார் மற்றும் வருவாய் துறையினர் போராட்டத் தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு நாட்களுக்குள் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுப்ப தாக உத்தரவாதம் கொடுத்ததை அடுத்து விவசாயிகள் போராட் டத்தை ஒத்திவைத்தனர்.


மின்சாரம் தாக்கி முதியவர் பலி

தஞ்சாவூர், மே 8- தஞ்சாவூர் விளார் சாலை அன்பு நகரைச் சேர்ந்தவர் ப.நடராஜ் (60). இவர், சனிக்கிழமை மாலை தனது மாடி  வீட்டின் பக்கவாட்டு சுவரில் அமர்ந்திருந்த போது நிலை தடு மாறி அருகில் சென்ற மின்கம்பி மீது விழுந்தார். இதில்  மின்சாரம் பாய்ந்து நடராஜ் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். தகவலறிந்ததும் தஞ்சாவூர் தெற்கு காவல்துறையினர் வந்து  நடராஜ் உடலை மீட்டு, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.


கார் மோதி ஒருவர் பலி

தஞ்சாவூர், மே 8 - பேராவூரணி அருகே உள்ள நாடியம் கிராமத்தை சேர்ந்த வர் ராஜேந்திரன் (62). இவர் மாடுகளுக்கு தீவனம் வாங்கிக்  கொண்டு, மல்லிப்பட்டினத்திலிருந்து கிழக்கு கடற்கரை சாலை யில், மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது, நாடியம் பிரிவு சாலையில் திரும்பிய போது, பின்னால் வந்த கார் மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ  இடத்திலேயே பலியானார். விபத்து ஏற்படுத்திய கார் நூறு மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் வயலுக்குள்  பாய்ந்தது. இதில் காரில் வந்தவர்களுக்கு சிறு காயம் ஏற்பட்டது.  இதுகுறித்து சேதுபாவாசத்திரம் காவல்துறையினர் வழக்குப் பதிந்து காரை ஓட்டி வந்த செங்கல்பட்டு மாவட்டம்  சிறுசேரியை சேர்ந்த அகமது என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.