எலக்ட்ரிகல் தொழிலாளர் சங்க நாகை மாவட்ட பேரவை
நாகப்பட்டினம் அக்.19 - தமிழ்நாடு எலக்ட்ரிக்கல் தொழிலாளர் சங்கத்தின் நாகப்பட்டினம் மாவட்ட பேரவை செவ்வாய்க்கிழமை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கூட்ட அரங்கில் நடைபெற்றது. கிளைத் தலைவர் டி.செந்தில் தலைமை வகித்தார். கூட்டத்தில் சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.தங்கமணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.எஸ். சுப்பிரமணியன் உரையாற்றினார். நியாயமான வருமானம், பணி பாதுகாப்பு, நலவாரிய பணப் பலன்களை வழங்க வேண்டும். விபத்து மரணத்திற்கு இழப்பீடாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். குழந்தைகள் கல்வி மற்றும் திருமண உதவித்தொகை வழங்க வேண்டும். தகுதியுடையோர் ஆய்வு உரிமம் கிடைக்க வேண்டும். தமிழ்நாடு எலக்ட்ரிக்கல் தொழிற்சங்கத்தின் முத லாவது மாநில மாநாட்டில் நாகையில் இருந்து ஐந்து பிரதிநிதிகளை பங்கேற்க வைப்பது, நலவாரியத்தில் பதிவு செய்யாதவர்கள் பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மின்சார வாரிய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்.செந்தில்குமார், என். வெற்றிவேல், எலெக்ட்ரிக் தொழிலாளர் சங்கத்தின் ஏ.பாபுராஜ் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.
இந்திய குடிமைப் பணிகளின் போட்டித் தேர்வுக்கு பயிற்சி
திருச்சிராப்பள்ளி, அக்.19 - சென்னை அகில இந்திய குடிமைப்பணி பயிற்சி மையத்துடன் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணைந்து ஆண்டு தோறும் 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுக் கிறது. மேலும், அவர்கள் குடிமைப் பணிகளில் சேருவதற்கான போட்டித் தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக பிரத்யேக பயிற்சி அளித்திடும் திட்டத் தினை செயல்படுத்திட தமிழக அரசால் ஆணை வழங்கப்பட்டுள்ளது. கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளை ஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்ப படிவம் மற்றும் அரசு வழி காட்டு நெறிமுறைகளை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் கட்டணமின்றி பதி விறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது விண்ணப்ப படிவங்களை திருச்சி (மண்டலம்) மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் மற்றும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகங்களில் வேலை நாட்களில் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பதாரர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் இணையதளத்தில் உள்ள அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ 31.10.2022-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர், எண்.4 காயிதே மில்லத் தெரு, காஜாநகர், திருச்சி - 20 (தொலைபேசி எண்(0431 2421173) அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
உரிமம் பெறாமல் விதைகளை விற்றால் கடும் நடவடிக்கை
கும்பகோணம் அக்.19 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், அம்மாபேட்டை, திருவிடை மருதூர், பாபநாசம் வட்டாரங்களில் உள்ள தனியார் விதை விற்பனை நிலையங்களில், தஞ்சாவூர் விதை ஆய்வு துணை இயக்குனர் முனைவர் விநாயகமூர்த்தி மற்றும் கும்பகோணம் விதை ஆய்வாளர் (பொ) நவீன் சேவியர் மேற்கொண்டனர். நடப்பு சம்பா மற்றும் தாளடி பருவத்தில், நெல் நாற்றங்கால் மற்றும் நடவு பணிகளில் விவசாயிகள் முழுவீச்சுடன் ஈடுபட்டு வருகின்றனர். விதைப்புக்கு தேவையான விதைகள் இருப்பு வைக்கப்பட்டு அரசு அங்கீ காரம் பெற்ற தனியார் விதை விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கும்பகோணம், அம்மாபேட்டை, ஆடுதுறை, இரும்புதலை, திருக்கருக்காவூர், பாபநாசம் பகுதிகளில் உள்ள தனி யார் விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டனர். விதை சட்டப்படி விதைகள் விற்பனை செய்ய வழங்கப்பட்ட உரி மங்கள், விதை உரிமங்கள் நடப்பில் உள்ள விவரங்கள், சம்பா பருவ விதைகள் இருப்பு, கொள்முதல் செய்யப்பட்ட விதைகளின் பொருள் பட்டியல், விவசாயிகளுக்கு வழங்கப்படும் ரசீதுகள் என ஆய்வு மேற் கொண்டனர். விதைகளின் முளைப்புத்திறன் குறித்து, விதை ஆய்வாளர்கள் மூலம் நெல் விதை மாதிரிகள் எடுக்கப்பட்டு, தஞ்சாவூர் விதை பரிசோதனை நிலையத்துக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். விவசாயிகள் உரிமம் பெற்ற விதை விற்பனையாளர் களிடம் ரசீது பெற்று விதைகளை வாங்கி பயன்படுத்த வேண்டும் என்றும் உரிமம்பெறாமல் விதை விற்பனை செய்தால், கடும் நட வடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.
கூடுதலாக வசூலித்த கட்டணத்தை திருப்பி தராத கல்லூரி நிர்வாகம் மாணவர் சங்கம் போராட்டம்
புதுக்கோட்டை, அக்.19 - புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணத்தை திரும்பத் தராததைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் வகுப்பைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலை, அறி வியல் கல்லூரியில் மாணவிகளிடம் கூடுதலாக கட்டணம் வசூலித்த தாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவர்கள் போராட்டத்தில் ஈடு பட்டனர். போராட்டத்தை தொடர்ந்து குறிப்பிட்ட தேதிக்குள் கட்டணத்தை திரும்பச் செலுத்தி விடுவதாக கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது. இந்நிலையில், குறிப்பிட்ட தேதிக்குள் கட்டணம் திரும்பச் செலுத்தாத தால், மாணவிகள் மீண்டும் வகுப்பைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் நகரத் தலைவர் எஸ்.மகாலெட்சுமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சா. ஜனார்த்தனன், துணைத் தலைவர்கள் கார்த்திகாதேவி, வசந்த குமார் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். போராட்டத் தைத் தொடர்ந்து நவம்பர் 30 ஆம் தேதிக்குள் பணத்தை திருப்பித் தர நட வடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
திருபுவனம் சோழன் பட்டு கூட்டுறவு அங்கத்தினருக்கு 50 சதவீத போனஸ்
கும்பகோணம், அக்.19 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் சோழன் பட்டு கூட்டுறவு சங்கத்தின் 42 ஆவது மகாசபை கூட்டம் சங்க அலுவலகத்தில் நடை பெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் சிங். செல்வராஜ் தலைமை வகித்தார். கூட்டத்தில் சங்க விற்பனையில் அங்கத்தினர்களுக்கு 50 சதவீத தீபாவளி போனஸ் வழங்கப்பட்டது. இதுகுறித்து சங்க தலைவர் சிங்.செல்வராஜ் செய்தி யாளரிடம் கூறுகையில், “திருபுவனம் சோழன் பட்டு கூட்டுறவு சங்கத்தில் வாடிக்கையாளர்களின் விருப்பத் திற்கு ஏற்ப நவீன டிசைன்களில் கைத்தறி நெசவாளர் களால் நெசவு செய்து, ஒரிஜினல் பட்டு புடவைகள் விற்பனை நடைபெற்று வருகிறது. இதில் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வண்ண வண்ண டிசைன்களிலும், ஆர்டரின் பெயரில் பட்டு புடவைகள் திறமை வாய்ந்த திருபுவனம் நெசவா ளர்களால் கைத்தறி நெசவு செய்தும் தரமானதாக வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த ஆண்டு விற்பனை இலக்காக ரூ.8 கோடியும், இன்னும் விற்பனையை அதிகரிப்பதற்கு அங்கத்தி னர்கள் முழு ஆதரவு தர வேண்டும். சங்க நிகர லாபத்தில் 50 சதவீதம் தீபாவளி போனசாக அங்கத்தினருக்கு வழங்குவது, உறுப்பினர்களின் விழாக்கால முன் பண மாக ரூ.10 ஆயிரமும் கூடுதலாக வழங்குவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பேரவையில் மேலாண்மை இயக்குனர் எஸ்.ஆர். சிவசுப்பிரமணியன், மேலாளர் சந்திரசேகரன், சங்க உப தலைவர் எஸ்.வைரவேல், இயக்குநர்கள் எம்.பி. ஆத்மராமன், ஆர்.ஆனந்தன், கே.பி.ராஜம், எஸ்.கமலா, பி.முத்துலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.