தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்கள், சாதனைகள் புகைப்பட கண்காட்சி
அரியலூர், மார்ச் 13- செந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மரு வத்தூர் ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு அரசின் சாதனை கள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி யை நேற்று பொதுமக்கள் பார்வையிட்டனர். கண்காட்சியில் தமிழ்நாடு முதல்வரால் துவக்கி வைக்கப்பட்ட நலத்திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் மற்றும் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு செயல்படுத்திய நலத்திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. இப்புகைப்பட கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.
காப்பீட்டு திட்ட பதிவு அலுவலகத்திற்கு கூடுதல் பணியாட்களை நியமித்திடுக! ஆட்சியரிடம் முஸ்லிம் லீக் மனு
திருச்சிராப்பள்ளி, மார்ச் 13- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மாவட் டம் சார்பில் திங்களன்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்று அளிக்கப்பட்டது. அம்மனுவில், ‘‘தமிழ்நாடு அரசின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்திற்கான பதிவு செய்யும் அலுவலகம் பழைய ஆட்சியர் அலுவலகம் அருகில் செயல்பட்டு வரு கிறது. இதில் ஒரு பணியாளர் மட்டுமே வேலை செய்து வருவ தால் மாவட்டம் முழுவதிலும் இருந்து பதிவு செய்ய வரும் ஏராளமான பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளா கின்றனர். எனவே, பதிவு அலுவலகத்திற்கு கூடுதல் பணி யாட்களை உடனடியாக நியமிக்க வேண்டும்’’ எனக் கூறப்பட்டுள்ளது. நிகழ்வில், மாவட்டத் துணைத் தலைவர் அலாவுதீன், இளைஞர் அணி மாவட்டச் செயலாளர் மைதீன் அப்துல் காதர், துணைத் தலைவர் நவாப் கான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ரயில் போக்குவரத்து பாதிப்பு
நாகர்கோவில், மார்ச் 13 நாகர்கோவில்-திருவனந்தபுரம் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதன் காரணமாக அவ்வப்போது சில ரயில்கள் ரத்து செய்யப் பட்டும் வருகிறது. தற்போது ரயில்களை ரத்து செய்யா மல் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் இரணியல்-பள்ளியாடி ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் எதிர்பாராத விதமாக உயர்மின் அழுத்த கம்பி அறுந்து விழுந்தது. அந்த கம்பி தண்டவாளத்தில் விழுந்தபோது அதிர்ஷ்டவசமாக அந்த இடத்தை விட்டு சற்று தொலைவிலேயே தொழிலா ளர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.