districts

திருச்சி முக்கிய செய்திகள்

கலை விழிப்புணர்வு நிகழ்ச்சி 

தஞ்சாவூர், டிச.12- தஞ்சாவூர் மாவட்டம், சேது பாவாசத்திரம் ஒன்றியம், மேற்குடிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், இல்லம் தேடிக் கல்வி கலை விழிப்பு ணர்வு நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் சு.சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதி தொடங்கி வைத்தார். வட்டார ஒருங்கி ணைப்பாளர்கள் கா.அன்பழகன், க.நாக ராஜன், இல்லம் தேடி கல்வித்திட்டத்தின் நோக்கம், தன்னார்வலர்கள் செயல் பாடுகள் குறித்து பேசினார். பள்ளி மேலாண்மைக் குழு தலைவி மா.ஜமுனா, தன்னார்வலர்கள் பிரிய தர்ஷினி, யுகனிதா, நிஷாலினி, மாண வர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். 

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

திருச்சிராப்பள்ளி, டிச.12- திருச்சி மாவட்டத்திலுள்ள வேலை நாடுநர்களை தனியார்துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கத்தோடு, திருச்சி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழி காட்டும் மையம் இணைந்து டிசம்பர் 19 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி வளாகத்தில், காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது. இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 8, 10, 12ம் வகுப்பு ஐ.டி.ஐ, செவி லியர், இளநிலை மற்றும் முதுநிலை பட்டதாரிகள் மற்றும் பொறியியல் படிப்பு கள் போன்ற கல்வித்தகுதிகளையுடைய 18 வயது முதல் 40 வயதிற்குட்பட்ட வேலை நாடுநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சுய விவரக்குறிப்பு அனைத்து கல்விச் சான்றுகளின் நகல்கள், ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.

ஆட்டோ தொழிலாளியை தாக்கிய ரவுடி உட்பட  4 பேர் கைது

கும்பகோணம், டிச.12- தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் பேரு ந்து நிலையத்தில் ஓம் சக்தி ஆட்டோ ஸ்டாண்டில் செம்பியவரம்பல் வீராச்சாமி மகன் மதியழகன் என்பவர் ஆட்டோ ஓட்டி தொழில் செய்து வருகிறார்.  இந்நிலையில், கடந்த புதனன்று மதியம் நாச்சியார்கோவில் வேப்பங் குளத்தை தெருவைச் சேர்ந்த சுமன், இவரது நண்பர் மனோகரன் ஆகியோர்  ஸ்டாண்டின் எதிரில் உள்ள ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு குடிபோதையில் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்த ஆட்டோ டிரைவர் மதியழகனை மரியாதை குறை வாக பேசி சவாரிக்கு அழைத்துள்ளார். அதற்கு மதியழகன் ஸ்கூல் பிள்ளை களை அழைக்க போக வேண்டும் என சொல்லி உள்ளார். ஆனால் சுமன் மற்றும் மனோகரன் மீண்டும் தகாத வார்த்தை களால் மதியழகனை பேசியதாக கூறப்படுகிறது. மேலும், மதியழகனை சரமாரியாக சுமன் மற்றும் கூட்டாளிகள் தாக்கி யுள்ளார். இதுகுறித்து கேட்டதற்கு, ஆட்டோ தொழிலாளியும் அவரது சகோத ரருமான சிவமணியையும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.இதில், படுகாயமடைந்த இருவரும் கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.  இந்நிலையில், தலைமறைவான சுமன் மற்றும் அவனது கூட்டாளிகள் மீது  புகாரின் பேரில் நாச்சியார்கோவில் காவல் துறையினர் ரவுடி சுமன் சதீஷ், மனோகரன், ஸ்டாலின் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, டிச.12-  போலி மருந்தாளுநர்களை ஒழித்திட கோரி புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் மருந் தாளுநர்கள் சனிக்கிழமையன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அனைத்து பதிவுற்ற மருந்தாளுநர்கள் நல சங்கத்தின் மாநில தலைவர் டி.கார்த்திக் தலைமை வகித்தார். மாநில செயலாளர் ரா.சோ.வசந்த குமார், செயற்குழு உறுப்பினர் கள் பி.செபசீலன், ஆர்.கிருஷ்ண குமார் உள்ளிட்டோர் விளக்கிப் பேசினர். சிஐடியு மாவட்ட செய லாளர் ஏ.ஸ்ரீதர், மாதர் சங்க மாவட்ட செயலாளர் டி.சலோமி உள்ளிட் டோர் ஆதரித்துப் பேசினர். போலி மருந்தாளுநர்களை ஒழித்திட வேண்டும். வலி மருந்து கள் போதை தரும் மருந்து களை இளைஞர்களிடம் விற்பனை செய்வதை தடை  செய்ய வேண்டும். மருந்தாளு நர்கள் முழுநேர பணியாளர்க ளாக பணிபுரிவதை உறுதிசெய்ய வேண்டும். மருந்தாளுநர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்திட வேண்டும். ஆன் லைன் மருந்து விற்பனையை முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி இந்த இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

செவிலியர்கள் சங்க மாவட்ட மாநாடு

திருச்சிராப்பள்ளி, டிச.12- தமிழ்நாடு அரசு எம்ஆர்பி செவிலியர்கள் சங்கத்தின் திருச்சி மாவட்ட முதல் மாநாடு திருச்சி அருண் ஓட்டலில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் பழனியம்மாள் தலைமை தாங்கினார். அஞ்சலி தீர்மானத்தை மாநில துணைத்தலைவர் சாந்தி வாசித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் பெரியசாமி துவக்கவுரையாற்றினார். அறிக்கையை மாவட்ட செயலாளர் கலையரசி வாசித்தார். வரவு செலவு அறிக்கையை பொருளாளர் மார்கரேட் சமர்ப்பித்தார். சாரால்மேரி நன்றி கூறினார்.

சிபிஎம் பெரம்பலூர், அரியலூர் மாவட்ட  மின் அரங்க இடைக் கமிட்டி மாநாடு

பெரம்பலூர், டிச.12.  சிபிஎம் பெரம்பலூர், அரியலூர் மாவட்ட மின் அரங்க இடைக் கமிட்டி மாநாடு டிசம்பர் 12 அன்று பெரம்பலூர் துறைமங்க லத்திலுள்ள மார்க்சிஸ்ட் கட்சி அலுவல கத்தில் நடைபெற்றது.  இதற்கு இடைக் கமிட்டி உறுப்பினர்கள் எம்.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். கே.கண்ணன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். ஆறுமுகம் வரவேற்று பேசி னார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.அகஸ்டின் துவக்க உரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.செல்லதுரை நிறைவுரையாற்றினார். செய லாளராக கே.கண்ணன் தேர்வு செய்யப் பட்டார். கருப்பசாமி நன்றி கூறினார். பொதுத்துறைகளை தனியார் மய மாக்குவதை கைவிட வேண்டும், மக்கள் விரோத, தொழிலாளர் விரோத மின்சார சட்ட திருத்த மசோதா 2021 கைவிட வேண்டும், தமிழக மின்சார வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், 1.12.2019 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வை வழங்க வேண்டும் உள்ளிட்ட  பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

செய்தியாளர்களுக்கு பயண அடையாள  அட்டைகளை வழங்காத ஆட்சியர் அலுவலகம்

மயிலாடுதுறை, டிச.12-  தமிழ்நாட்டின் 38 ஆவது மாவட்டமாக உருவாக்கப்பட்ட மாவட்டம் மயிலாடுதுறை. மாவட்டத்தின் தலைமையிடமாக உள்ள மயிலாடுதுறையின் பெயர்கள் மட்டும் தான் மாயூரம், மாயவரம் என மாறி இருக்கிறதே தவிர.!  1960 களில் இருந்ததுப்போலவே இன்றும் அப்படியே இருக்கிறது. பழமை யான நகரம் என்ற பெயரைத்தவிர அடிப்ப டையான வசதிகள் முற்றிலும் இல்லாத மக்கள் நிம்மதியாக வசிக்க குறைந்த தகுதி களைக் கொண்ட ஊர்.  காமராஜர் காலத்தில் கட்டிய பேருந்து நிலையம், மருத்துவர்கள் இருந்தும் முறை யான சிகிச்சையளிக்காத, இரவு நேரங்களில்  தூய்மைக் காவலர்கள் சிகிச்சையளிக்கும் தரமில்லாத மருத்துவமனை, திரும்பும் திசையெங்கும் வழிந்தோடும் பாதாளச் சாக்கடை, போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகள் என குறைகள் மட்டுமே மிஞ்சி யிருக்கும் நகரமான மயிலாடுதுறையை அவசர அவசரமாக மாவட்டமாக உரு வாக்கியது எடப்பாடி பழனிச்சாமி தலை மையிலான அதிமுக அரசு.  மாவட்டமாக அறிவித்து  ஓராண்டை கடந்தும் மாவட்டத்தில் நிகழும் செய்திகளை யும், ஆட்சியர் பங்கேற்கும் செய்திகளை யும் ஒவ்வொரு  நாளும் நாளிதழ்களிலும், செய்தி சேனல்களிலும் வெளியிட உழை க்கும்  செய்தியாளர்களுக்கான பேருந்து பயண அட்டையை கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்திடம் இருந்து பெற்றுத்தரவில்லை.  ஒன்றுபட்ட நாகை மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலக அறிவு றுத்தலின் பேரில் மயிலாடுதுறை பகுதி செய்தியாளர்கள் தங்கள் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்திலேயே நிறுவனங்களின் கடிதங்களை அளித்து பேருந்து பயண அட்டைகளை பெற்றுக்கொள்ளலாம் என்பதை நம்பி ஓராண்டாகியும் கூட இது வரை பயண அட்டைகளை வழங்குவ தற்கான எந்தவித பணிகளும் நடந்ததாக தெரியவில்லை.  மேலும் மாவட்ட ஆட்சியர் கையொப் பத்துடன் கூடிய அடையாள அட்டைகளும் வழங்கப்படும் என்று காத்திருக்கும் செய்தியாளர்களின் எதிர்பார்ப்பை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு  பொறுப்பு அதிகாரியும் எப்போது நிறைவேற்றுவார்கள்? அடையாள அட்டை கள் அடுத்த ஆண்டிலாவது கிடைக்குமா?

 

 

;