districts

ஓவிய, சிற்பக் கலைஞர்களுக்கு பயிற்சி முகாம்

திருச்சிராப்பள்ளி, ஜூலை 5 -

    தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை ஓவிய நுண்கலைக் குழுவுடன் இணைந்து திருச்சிராப்பள்ளி மண்டலக் கலை பண்பாட்டு மையம் சார்பில் 18 வயதிற்கு மேற்பட்ட ஓவிய மற்றும் சிற்பக் கலைஞர்களுக்கான சிறப்புக்  கலைப் பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளது.

   ஸ்ரீரங்கத்தில் உள்ள மாவட்ட அரசு இசைப்பள்ளி எதிரே, ஜி.எஸ்ஆர்.கே. காந்திமதி ஸ்ரீநிவாச மஹாலில் 10.7.2023  மற்றும் 11.7.2023 ஆகிய 2 நாட்கள் இம்முகாம் நடைபெறு கிறது. முகாமில் தமிழகத்தின் புகழ் வாய்ந்த ஓவிய மற்றும் சிற்பக் கலைஞர்கள் கலந்து கொண்டு மரபுபாணி ஓவியம், நவீனபாணி ஓவியம், தஞ்சாவூர் ஓவியம், கண்ணாடி ஓவியம் மற்றும் மரச்சிற்பம் ஆகியன குறித்து பயிற்சி  மற்றும் செயல்முறை விளக்கம் அளிக்கின்றனர்.

    திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அனைவரும் இம்முகா மில் கலந்து கொள்ளலாம். 2 நாட்கள் அளிக்கப்படும் பயிற்சியில் கலந்து கொள்ளும் ஓவியர்களுக்கு பயிற்சி நிறைவு நாளில் சான்றிதழ் வழங்கப்படும்.

    முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை குறிப்பிட்டு உதவி இயக்குநர், மண்டலக் கலை பண்பாட்டு  மையம், டெப்போ ரோடு, மூலத்தோப்பு, ஸ்ரீரங்கம், திருச்சி ராப்பள்ளி-620 006 என்ற முகவரிக்கு நேரிலோ, தொலை பேசி வாயிலாகவோ அணுகி, தங்கள் பெயர்களை முன்பதிவு  செய்து கொள்ளலாம்.  

   மேலும் விவரங்களுக்கு 0431-2434122 அல்லது 90476 50951 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ள லாம் என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்து உள்ளார்.