திருவாரூர்,செப்.5 கேரள மாநிலம் வயநாட்டில் இயற்கைச் சீற்றத்தினால் ஏற்பட்ட நிலச்சரிவு நிவாரணப் பணிகளுக்காக, திருவாரூர் இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிர் கல்லூரி நிர்வாகம் மற்றும் மாணவிகள் சார்பாக கேரள மாநில முதல்வரிடம் நிவாரண நிதி வழங்கப்பட்டது. கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவு பாதிப்புக்கு பல்வேறு தரப்பினரும் மனித நேயத்துடன் மொழிகள் கடந்து உதவி செய்துவரும் நிலையில், திரு வாரூர் இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிர் கல்லூரி சார்பாக கல்லூரி முதல்வர் கோ.தி.விஜய லெட்சுமி தலைமையில் மாணவ பேரவைத் தலைவர் ஏ.சபிகா மற்றும் பேரவை மாணவிகள் குழுவாக சென்று கேரளா முதல்வர் பினராய் விஜயனை நேரில் சந்தித்து நிவாரண தொகை ரூ,2 லட்சத்துக்கான காசோலையை வழங்கினர். சிபிஎம் மாநில குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன்,இந்திய ஐனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில செயலா ளர் ஏ.வி.சிங்காரவேலன் ஆகியோர் ஒருங்கிணைப்பு பணியை செய்தி ருந்தனர்.