திருச்சிராப்பள்ளி, ஜூலை 13-
துப்புரவுப் பணிகளை தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்க்கக் கூடாது என வலியுறுத்தி தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர் மாவட்டங்களில் போராட்டம் தொடர் கிறது.
துப்புரவுப் பணிகளை தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்க்கக் கூடாது. தற்காலிகப் பணியாளர் களை நிரந்தரமாக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் தெரிவித்தபடி தினக்கூலி ரூ.630 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சிராப்பள்ளி மாவட்டம் முசிறி யில் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட துப்புரவுப் பணி யாளர்கள். வேலைநிறுத்தப் போராட் டத்திற்கு ஊரக வளர்ச்சி உள்ளாட் சித் துறை ஊழியர் (சிஐடியு) சங்கத் தலைவர் கார்த்திக் தலைமை வகித் தார்.
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி அலுவலக வளாகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் துப்பு ரவுப் பணியாளர்கள் வியாழனன்று காத்திருப்புப் போராட்டத்தில் ஈடு பட்டனர். சிஐடியு மாநிலச் செயலா ளர் எஸ்.அகஸ்டின், மாவட்டச் செய லாளர் ரெங்கநாதன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் கே.எம்.சக்தி வேல் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்திப் பேசினர்.
தஞ்சாவூர்
தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட் டத் துணைச் செயலாளர் கே.அன்பு தலைமை வகித்தார். மாவட்ட நிர் வாகிகள் பி.என். பேர்நீதி ஆழ்வார், இ.டி.எஸ். மூர்த்தி, எஸ்.செங்குட்டு வன், எஸ்.மில்லர்பிரபு, ஏ.ராஜா, சாய் சித்ரா, எஸ். மாதவன், மற்றும் செல் வம், த.முருகேசன், வீரையன் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.