districts

img

அண்ணன் மகன்களை காப்பாற்றச் சென்ற ராணுவ வீரர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

தஞ்சாவூர், ஜூலை 3-

     ஆற்றில் அடித்து செல்  லப்பட்ட அண்ணன் மகன் களை காப்பாற்ற சென்ற ராணுவ வீரர் நீரில் மூழ்கி பலியானார்.

     தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே  மகிமைபுரம் பூண்டி, புதுத்  தெருவைச் சேர்ந்தவர் ஆரோன் இளையராஜா (38).  இவர் கடந்த 17 ஆண்டு களாக திருச்சி பட்டாலிய னில் (ஹவில்தார்) ராணுவ வீரராக பணிபுரிந்து வந் தார்.

     இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு விடுப்பில் சொந்த ஊருக்கு வந்தவர், ஞாயிற்றுக்கிழமை ஆரோன் இளையராஜா, தனது மனைவி சுகன்யா,  அண்ணன் மகன்கள் ஹாரிஸ் (12), சூர்யா (18) ஆகியோரு டன் கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது, ஆற்றில் ஆழ மான பகுதியில் அண்ணன்  மகன்கள் இறங்கியதால் இரு வரும் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.  

     அவர்களை காப்பாற்ற ஆரோன் இளையராஜா சென்றுள்ளார். இருப்பி னும், மூவரும் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டனர். மூவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மீட்புப் பணியில் ஈடுபட்ட னர். இதில் இரண்டு சிறு வர்களும் மீட்கப்பட்ட நிலை யில், ஆரோன் இளைய ராஜா நீரில் மூழ்கி மாயமா னார்.

   சம்பவ இடத்திற்கு வந்த  திருக்காட்டுப்பள்ளி தீய ணைப்பு படையினரும், அப்  பகுதியில் உள்ள மீனவர்  களும் பல மணி நேரம்  தேடிய போது, இறந்த நிலை யில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஆரோன் இளைய ராஜா உடலை மீட்டனர். இது குறித்து திருக்காட்டுப்பள்ளி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இறந்த ஆரோன் இளையராஜாவின் சடலம் உடற்கூறாய்வுக்கு பிறகு திங்கள்கிழமை அவ ரது குடும்பத்தினரிடம் ஒப்ப டைக்கப்பட்டது.

    பின்னர், திருச்சி தலைமை அலுவலக கர்னல்  ஷாஜி, டைரக்டர் எக்ஸிக்  யூட்டிவ் கர்னல் ராமன் ஆகி யோர் தலைமையிலான ராணுவ வீரர்கள், இறந்த ஆரோன் இளையராஜா உட லுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

;