திருச்சிராப்பள்ளி, ஆக.12 - திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்களன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் நடந்தது. சிஐடியு திருச்சி மாநகர் மாவட்ட செயலா ளர் ரெங்கராஜன் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் எம்ப்ளாயீஸ் யூனியனை சேர்ந்த சங்க செயலாளர் சதாசிவம் ஆட்சி யர் பிரதீப்குமாரிடம் கொடுத்த மனுவில் தெரி வித்திருப்பதாவது: திருச்சி மாவட்டம் முத்தரசநல்லூரில் அமைந்துள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய இராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்டத் தில், கடந்த 12 ஆண்டுக்கும் மேலாக 19 தொழிலாளர்கள் மோட்டார் மின் பணியா ளர்களாகவும், மோட்டார் இயக்குநர்களாக வும் பணிபுரிந்து வருகிறோம். எங்களுக்கு கடந்த 2 மாத சம்பளம் இதுவரை வழங்கப் படவில்லை. இதனால் எங்கள் குடும்பத்தை காப்பாற்ற முடியாத சூழ்நிலையில் உள் ளோம். எனவே மாவட்ட ஆட்சியர் இதில் தலையிட்டு, எங்களுக்கு சம்பளம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்திருந்தார். மாவட்ட ஆட்சியரிடம் மனுவை கொடுத்த போது ராகுல், அண்ணாவி, கண்ணன், கோபி நாத், தினகரன், உதயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.