districts

தையல் இயந்திரம் வழங்கல்

பொன்னமராவதி, ஜூலை 24-

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் செயல்பட்டு வரும் வட்டார வயலக கூட்டமைப்பின் சார்பாக கண்மாய் தூர்வாருதல், மரம் நடுதல் ஆகிய  பணிகளுடன் மகளிர் குழுக்களுக்கு கடன்களும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் வயலகத்தின் வேளாண் நிதி குழுவில் உள்ள 26 பெண் உறுப்பினர்களுக்கு தையல்  இயந்திரம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பொன்னமரா வதி வட்டார தலைவர் சம்பத், செயலாளர் சுந்தர்ராஜ், துணைத் தலைவர் அழகர்சாமி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.