districts

img

திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் கோடை பயிற்சி முகாம் நிறைவு

திருச்சிராப்பள்ளி, மே 15 - தமிழ்நாடு விளையாட்டு மேம் பாட்டு ஆணையம் சார்பில் திருச்சி ராப்பள்ளி அண்ணா விளையாட்ட ரங்கில், கடந்த ஏப்.29 முதல் மே 14 வரை கோடைகால சிறப்பு பயிற்சி விளை யாட்டு முகாம் நடைபெற்றது.  இந்த பயிற்சி முகாம் 18 வயதிற்குட் பட்டவர்களுக்கு, காலை 6.30 முதல்  8.30 மணி வரை மற்றும் மாலை 4.30 மணி  முதல் 6.30 மணி வரை நடைபெற்றது. முகாமில் தடகளம், கால்பந்து, கையுந்து பந்து, வளைகோல்பந்து ஆகிய விளை யாட்டுகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு  மேம்பாட்டு ஆணையம், அண்ணா  விளையாட்டரங்கம் பயிற்சியாளர் களைக் கொண்டு சர்வதேச தரத்தில் பல்வேறு அறிவியல் நுட்பங்களுடன் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் இந்த  பயிற்சி முகாமில் 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட னர். முன்பதிவு மேற்கொண்டு பயிற்சி  கட்டணம் செலுத்தி, முகாமில் பங்கு பெற்ற அனைத்து மாணவ, மாணவி களுக்கும் சான்றிதழ் மற்றும் விளை யாட்டு சீருடைகள் வழங்கப்பட்டன. மேலும், சிறப்பு பயிற்சியாக மல்லர்கம்பம்  மற்றும் மல்யுத்தம் ஆகிய விளை யாட்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. மல்லர்கம்பம் விளையாட்டில் 60 மாணவ,  மாணவிகளும், மல்யுத்தம் விளையாட்டில் 25 மாணவ, மாணவி களும் கலந்து கொண்டனர்.  விழாவில், மாவட்ட ஆட்சியர் பிரதீப்  குமார் விளையாட்டுகளால் ஏற்படும் பயன்கள் மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்து மாணவ, மாணவிகளுக்கு அறி வுரை வழங்கினார். புதிய விளை யாட்டாக அண்ணா விளையாட்டரங் கில் ஆரம்பிக்கப்பட்ட மல்லர்கம்பம் விளையாட்டில் பயிற்சி மேற்கொள் ளும் 4 வயதுக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகளை பாராட்டி, அவர்களை ஊக்குவித்தார். இம்முகாமில் மண்டல முதுநிலை மேலாளர், மாவட்ட விளையாட்டு மற்றும்  இளைஞர் நலன் அலுவலர் (பொ) வேல் முருகன் மற்றும் பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.