அருமனை, ஏப்.28- அருமனை அருகே மஞ்சாலுமூடு பகுதி யில் நள்ளிரவில் கழிவுப் பொருட்கள் ஏற்றி வந்த வாகனத்தை பொதுமக்கள் தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யது. கேரளா எல்லையோரப் பகுதிகளில் இருந்து ஏராளமான கழிவுப்பொருட்கள் குமரி மாவட்டத்திற்குள் கொண்டு வரப்பட்டு, ஆங்காங்கே வீசி செல்வதும், பன்றி பண்ணை களுக்கு தீனியாக கொடுப்பதும் வழக்கமாகி வருகிறது. வீசி செல்லப்படும் பெரும்பாலான பொட்டலங்களில் மருத்துவக் கழிவு பொருட் கள் காணப்படுகின்றன. இதனால் துர்நாற்றம் வீசி பல்வேறு நோய்கள் உருவாக காரண மாகிறது. இது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மஞ்சாலுமூடு வழியாக இரவு நேரங்களில் கழிவுப் பொருட்கள் கொண்டு வருகின்றனர் என்பது தெரிய வந்தது. இதையறிந்த பொதுமக்கள் சனிக் கிழமை இரவு கண்விழித்து காவல் இருந் துள்ளனர். நள்ளிரவில் துர்நாற்றத்துடன் வந்த வாகனத்தை தடுத்து நிறுத்திய போது, அந்த வாகனத்தில் கழிவுப் பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து ஓட்டுநரிடம் விசாரித்த போது, பன்றி பண்ணைக்கு கொண்டு செல்வதாக கூறியுள்ளார். இதனால், அப்பகுதி மக்கள் அருமனை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், அருமனை காவல் ஆய்வாளர் கங்கை நாதபாண்டியன் சம்பவ இடத்திற்கு வந்து, ஓட்டுநரிடம் விசாரித்தார். பின்பு அந்த வாகனத்திற்கு மஞ்சாலுமூடு ஊராட்சி நிர்வா கத்தின் மூலம் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த வாகனம் வந்த வழியே திருப்பி அனுப்பப் பட்டது. இச்சம்பவத்தின் போது, ஊராட்சித் தலைவர் தீபா, உறுப்பினர் செல்வன் உள்ளிட் டோர் இருந்தனர். நள்ளிரவில் நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், “இப்படி மருத்துவக் கழிவுப் பொருட்களை குமரி மாவட்டத்தில், ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் கொட்டி விட்டுச் செல் கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் எல்லை ஓரங்களில் இருக்கிற சோதனைச் சாவடி களில் அதிக காவலர்களை நியமித்து, இத்த கைய வாகனங்களை திருப்பி அனுப்ப வேண் டும். அதோடு அவர்கள் மீது கடுமையான நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளனர்.