districts

img

அகில இந்திய மாநாட்டு நிதியளிப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு ஏப்.2 முதல் 6 ஆம் தேதி வரை மதுரையில் நடைபெறுகிறது. இதற்கான நிதியின் முதல் தவணையை பல்வேறு மாவட்டக்குழுக்கள், விழுப்புரத்தில் நடைபெற்று வரும் மாநில மாநாட்டில் வழங்கினர். கன்னியாகுமரி, சிவகங்கை, காஞ்சிபுரம், தேனி, புதுக்கோட்டை, அரியலூர், கடலூர், பெரம்பலூர், திருவள்ளூர், திருச்சி மாநகர்-புறநகர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டக்குழுக்கள் சார்பில் கட்சியின் மாவட்டத் தலைவர்கள், அரசியல் தலைமைக்குழு ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்காரத்திடம் வழங்கினர். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிருந்தாகாரத், ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம், மாநிலச் செயற்குழு உறுப்பினரும், அகில இந்திய மாநாட்டு வரவேற்புக்குழு செயலாளருமான சு.வெங்கடேசன் எம்.பி., உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.