districts

img

சிவாயம் கல் குவாரியை மூடவில்லையென்றால் தொடர் போராட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரிக்கை

குளித்தலை, ஜூன் 6-

      கரூர் மாவட்டம் சிவாயத்தில் 24 மணி நேரமும் செயல்  படும் கல் குவாரியை இழுத்து மூடி சீல் வைத்திட தமிழக  அரசும், கரூர் மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டும். இல்லையென்  றால் மக்களை திரட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போராட்டங்கள் நடத்தப்படும் என குளித்தலை ஒன்றிய செயலாளர்  இரா.முத்துச்செல்வன் தெரி வித்துள்ளார்.

    மேலும் அவர் தனது அறிக்கை யில் கூறியிருப்பதாவது:

    கரூர் மாவட்டம், கிருஷ்ண ராயபுரம் வட்டம், சிவாய வடக்கு  கிராமத்தில் புல எண்கள்: 15/1&2- ல், 0.2.80.00 ஹெக்டேர்  (சுமார் 07.00 ஏக்கர்) பரப்பளவில் அரசு விதிகளை மீறி செயல்படும் நவமணி மைன்ஸ் பிரைவேட் லிமிடெட் கல்குவாரிக்கு அனுமதி வழங்கக் கூடாது தற்போது சட்ட விரோதமாக இரவு பகல் என 24 மணி நேரமும் செயல்படும் இந்த கல்குவாரியை இழுத்து மூடி சீல் வைத்திட தமிழக  அரசும் கரூர் மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்  

   இல்லையென்றால் இந்த கல்குவாரியை இழுத்து மூட வலியுறுத்தி மக்களை திரட்டி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் போராட்டங்கள் நடத்தப்படும் வீடுகள், வீட்டு மனைகள், நிரந்தர கட்டுமானங்கள் சிறு கனிம சலுகை விதிகள் 1959 பிரிவு 36 (1) அடிப்ப டையில், அங்கீகரிக்கப்பட்ட வீடுகள், ஊராட்சி மற்றும் டிடிசிபி-ஆல் அங்கீகரிக்கப்பட்ட வீட்டுமனைகள், ஊர் நத்தம், கோயில் போன்ற நிரந்தர கட்டுமானங்கள், அரசின்  தொகுப்பு வீடுகள், பசுமை வீடுகள் இருந்தால் 300 மீட்டர் இடைவெளி விட்டு மட்டுமே குவாரிப் பணி செய்ய வேண்டும் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

     சிவாயம் வடக்கு கிராமம் நவமணி மைன்ஸ் பிரை வேட் லிமிடெட் கல்குவாரி புல எண்கள்:15/1&2 -அய் கிழக்குப் பகுதியில், கல்குவாரியின் வெளி முனைப் பகுதியில் இருந்து சுமார் 150 மீட்டர் தூரத்தில் புல எண்:  6-ல் டிடிசிபி அங்கீகரிக்கப்பட்ட எண்:367/2019 என்பதில்  சுமார்40 வீட்டுமனை உள்ளது.

  இது புல வரைபடம், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு  அறிக்கையில் இணைக்கப்பட்ட படங்களில் ஆகியவற் றில் தெளிவாக காட்டப்பட்டு உள்ளது.

   இது தமிழக அர சின் பதிவுத்துறை வில்லங்கச் சான்றிதழில் உள்ளது. சிவாயம் வடக்கு கிராமம் நவமணி மைன்ஸ் பிரை வேட் லிமிடெட் கல்குவாரி புல எண்கள்:15/1&2 -அய் சுற்றி,  கல்குவாரியின் வெளி முனைப் பகுதியில் இருந்து 300மீட்டர் சுற்றளவில், கிழக்குப் பகுதியில் புல எண் 6-ல்,  தெற்குப் பகுதியில் புல எண் :29- இல், தென் கிழக்குப்  பகுதியில் புல எண்: 241-ல் பல வீடுகள் உள்ளன. இது புல வரைபடம், நிறுவனம் வெளியிட்டுள்ள சுற்றுச்  சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையில் உள்ள வரை படங்களில் தெளிவாக காட்டப்பட்டு உள்ளது.

   எனவே, சிறு கனிம சலுகை விதிகள் 1959 பிரிவு 36 (1), வீடு, வீட்டு மனைகள், நிரந்தர கட்டுமானங்கள் ஆகியவை  குவாரியின் வெளி முனைப் பகுதியிலிருந்து 300 மீட்டர் (சுமார் 1000 அடி)இடைவெளி விட்டுத்தான் குவாரி பணி  செய்ய வேண்டுமென அரசு விதி தெளிவாக கூறப்பட்டு  உள்ளது.

   நவமணி மைன்ஸ் கல்குவாரி அவ்வாறு இல்லாத தால் சட்டப்படி அனுமதி தர முடியாது. அனுமதி தரக்  கூடாது குவாரியின் நடுப்புறத்தில் வண்டிபாதை சிவாயம்  வடக்கு கிராமம் நவமணி மைன்ஸ் பிரைவேட் லிமிடெட்  கல்குவாரி அமைய இருக்கும் புல எண்கள்:15/1&2 -அய்  சுமார் 7 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த கல்குவாரி அமைய இருக்கும் புலத்திலேயே நடுப்புறம் பகுதியில் வண்டி பாதையாக உள்ளது. வண்டிப்பாதை இருந்தால், பாதைக்கு இருபுறமும் 35 அடி (10 மீட்டர்) இடைவெளி விட்டு தான் கல்குவாரி  செயல்பட வேண்டும்.

  ஆனால் இந்தப் பாதை இருப்பதை குறிப்பிடாமல் மறைத்துத் தான் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை கொடுக்கப்பட்டு உள்ளது.  சிறு கனிம சலுகை விதிகள் 1959 பிரிவு 36 (1) அடிப்படை யில், வண்டிப் பாதைக்கு 10 மீட்டர் (35 அடி) இடைவெளி  விட்டு குவாரிப் பணி செய்ய வேண்டும் என தெளிவாக  குறிப்பிடப்பட்டுள்ளது.

   ஆனால் நவமணி மைனஸ் கல் குவாரி அவ்வாறு இல்லை. குவாரி புலத்தில் இருந்து 50 மீட்டருக்குள் ஓடைசிறு  கனிம சலுகை விதிகள் 1959 பிரிவு 36 (1), ஓடை மற்றும்  வாய்க்கால் செல்வதிலிருந்து 50 மீட்டர் இடைவெளி விட்டு  குவாரி பணி செய்ய வேண்டுமென அரசு விதி தெளிவாக  கூறப்பட்டு உள்ளது. ஆனால் புல எண்:15/1&2ன் புலத்தின்  தென்புறத்தில் ஓடை இருப்பதை எந்த அதிகாரிகளின் ஆவ ணத்திலும் காட்டப்படவில்லை.

   ஆனால் குவாரிப்புல எண் 15-க்கு தெற்காக, புல எண் 15 லிருந்து புல எண்:18-ல் ஓடை செல்வதை புல வரை படம், ஆகியவற்றில் தெளிவாக காட்டப்பட்டு உள்ளது. ஓடை இருந்தால் 175 அடி (50 மீட்டர்) இடைவெளி விட்டு தான் கல்குவாரி செயல்பட வேண்டும் என சிறு கனிம  சலுகை விதிகள் 1959 பிரிவு 36 (1) தெளிவாக குறிப்பிடப்  பட்டுள்ளது. கல்குவாரியை சுற்றி 500 மீட்டருக்குள் பல குளங்கள்  - அரசின் நீரேற்று நிலையங்கள் ஏரி, குளங்கள், கண்வாய், அணை போன்ற தண்ணீர் தேங்கி நிற்கும் நீர்நிலைகள் இருந்தால், 500 மீட்டர் தூரத்திற்குள் குவாரி கள் அமைக்க கூடாது என்று பல்வேறு நீதிமன்ற உத்தரவு கள் உள்ளன.

   சிறு கனிம சலுகை விதிகள் 1959 பிரிவு 36 (1) அடிப்படை யில், குடிநீர் எடுக்கும் இடங்கள், நீரேற்றும் நிலையங்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, பாலங்கள் இருந்தால் 500 மீட்டர் இடைவெளி விட்டு குவாரிப் பணி செய்ய வேண்டும் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.  சிவாயம் வடக்கு கிராமத்தில் குவாரி அமைய இருக்கும், புல எண் 15/1-ன் கிழக்குப்புறத்தில் 300 மீட்டர்  தூரத்தில் அய்யர்மலை மேற்கு பகுதியில் மேல்நிலைப் நீர்த்தேக்க தொட்டி உள்ளது.

    குவாரி அமைய இருக்கும், புல எண் 15/1-ன் தெற்கு  புறத்தில் புல எண்:17-ல் 300 மீட்டர் சுற்றளவிற்குள் நீருந்து  நிலையம் (போர்வெல்) உள்ளது. 500 மீட்டர் சுற்றளவிற்  குள் மேல்நிலைப் நீர்த்தேக்க தொட்டி - நீருந்து நிலையம்  இருப்பதால் கல்குவாரிக்கு, அதிகாரிகளால் அனுமதி தர முடியாது.

    சிறு கனிம சலுகை விதிகள் 1959 பிரிவு 36 (1) அடிப்படை யில், குடிநீர் எடுக்கும் இடங்கள், நீரேற்றும் நிலையங்கள்,  மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, பாலங்கள் இருந்தால் 500 மீட்டர் இடைவெளி விட்டு குவாரிப் பணி செய்ய வேண்டும் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

   எனவே  இந்த கல்குவாரிக்கு அனுமதி தர முடியாது.அனுமதி தரக் கூடாது. நவமணி லைன்ஸ் புல எண்:13&14-ல் உள்ள கல்குவாரி களும் இன்று வரை இரவு பகலாக, சட்ட விரோதமாக இயங்கிக் கொண்டுள்ளது. அனுமதி முடிந்த கல் குவாரியில் கற்களை வெட்டி  கடத்தி வரும் நிலையில், இதே பகுதியில் புல எண்:30/ 1ஏ,1பி ரத்தினம் கல்குவாரியும் இன்று வரை கற்களை வெட்டி கடத்தி வருகின்றனர்.   புல எண்:2/2-ல் அனுமதி முடிந்த காலமான 2019 முதல் 2022 வரை விரோதமாக திருட்டுத்தனமாக கல் குவாரி யை இயக்கி, இன்று பல கோடி ரூபாய் அதற்கு அப ராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

    பல கோடி ரூபாய் கனிம  முறைகேடு மேற்கொண்டவர்கள் மீது, எந்தவித முறைகேடு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. புல  எண்:2/2-ல், அனுமதி காலம் முடிந்த மூன்று ஆண்டு கள் ஆன நிலையில் இன்று வரை கம்பி வேலி அமைக்  கப்படவில்லை. சிவாயம் கிராமத்தில், அனுமதிக்கப்பட்ட நேரமான காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்காமல்  இரவு பகலாக இயங்கி, பல கோடி ரூபாய் கணக்கிலான  கற்களை வெட்டி கடத்திக் கொண்டு இயங்கிக் கொண்  டுள்ள ஜெயமணி கல்குவாரியிலும், அனுமதி முடிந்த  அனைத்து குவாரிகளும் கம்பி வேலி இதுவரை அமைக் கப்படவில்லை. பசுமை அரண் அமைக்கப்படவில்லை. ஒரு கல் குவாரியும் சுமார் ஆயிரம் மரங்கள் வரை  வைப்பதாக தங்களுடைய சுரங்க திட்டத்தில் தெரிவித் துள்ளனர். பல கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் கல்  குவாரிகள் அரசுக்கு தெரிவித்த அடிப்படையில் மரங்கள்  வைக்க அதிகாரிகள் எவ்வித நடவடிக்கை எடுக்க வில்லை. இயற்கையை அழித்து சுற்றுச்சூழலை அழித்து பல்வேறு மாசுபடுத்தும் கல் குவாரிகளும் கிரசர் மற்றும்  எம்சாண்ட் அலைகளும் ஒரு மரம் கூட வைக்காமல் அரசை யும் மக்களையும் ஏமாற்றி வருகின்றனர். பசுமை அறம்  என்பது இயங்கி முடிந்த கல் குவாரிகளும் இல்லை ஏங்கிக் கொண்டுள்ள கல்குவாரிகளும் இல்லை இது முழுக்க முழுக்க சட்ட விரோதமாகும் சமூக குற்றமாகும். அய்யர்மலை ரோப் கார் திட்டம், கல்குவாரி -கிரசர் -  எம்.சாண்ட் ஆலை இருப்பதாலேயே சுற்றுச்சூழல் பாதிப்பு - சட்டவிரோத வெடிவைப்பு - கடும் நில அதிர்வு  ஏற்பட்டு பிரச்சனையாகும் என்பதால், திட்டமிட்டு ரோப்  கார் திட்டம் வர விடாமல் தடுக்கப்பட்டு வருகிறது.

    கிராமப்புற சாலைகளில்/ ஊராட்சி ஒன்றிய சாலை களில் 20 டன் எடையுள்ள 6 சக்கர டிப்பர் லாரி மட்டுமே  செல்ல வேண்டும் என்ற நிலையில், அனைத்து சாலை களில் 6 சக்கர டிப்பர் லாரி-16 டன், 10 சக்கர டிப்பர் லாரி-26  டன், 12 சக்கர டிப்பர் லாரி-36 டன், 16 சக்கர டிப்பர் லாரி-48 டன் என்ற நிலையில் எங்கும் சட்டப்படி இல்லாமல், லாரி கள் இயக்கப்படுவதால் பல்லாயிரம் கோடி மக்களின் வரிப்பணம் கல்குவாரி உரிமையாளர்களின் சட்ட விரோத கொள்ளைக்காக வீணாகிறது.

    இயங்கி முடிந்த கல்குவாரிகளில் இருந்து எந்த  தேவைக்கும் தண்ணீர் எடுக்க கூடாது என்ற சட்டம் உள்ள  நிலையில், அனுமதி காலம் முடிந்த கல்குவாரியில் இருந்து, கிரசர் மற்றும் எம்.சாண்ட் ஆலைக்கு சட்டவிரோ தமாக எடுக்கப்பட்டு வருகிறது.

    எனவே இந்த கல்குவாரிக்கு சட்ட அடிப்படையில் எக்காரணம் கொண்டும் தர தரக்கூடாது என தமிழக அர சையும் கரூர் மாவட்ட நிர்வாகத்தையும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் குளித்தலை ஒன்றிய குழுவின் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

     இதனை மீறி அனுமதி கொடுத்தால் மக்களை திரட்டி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குளித்தலை ஒன்றி யக்குழு சார்பில் சட்டவிரோதமான கல்குவாரிகளுக்கு எதிராக மிகப்பெரிய தொடர்போராட்டங்கள் நடத்தப் படும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.