தஞ்சாவூர், ஆக.19 - தஞ்சாவூர் விதைப் பரிசோதனை அலுவலர் குப்புசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, சம்பா பருவம் ஆகஸ்ட் மாதத்தி லும், தாளடி பருவம் செப்டம்பர் மாதத்தி லும் தொடங்கவுள்ள நிலையில், தஞ்சா வூர் மாவட்டத்திற்கு ஏற்ற நீண்ட கால ரகங்களான சி.ஆர்.1009, சப்1 சாவித்ரி (சி.ஆர்.1009), ஆடுதுறை 51, தாளடி பரு வத்துக்கு ஏற்ற மத்திய கால ரகங்க ளான ஆடுதுறை 38, ஆடுதுறை 39, ஆடுதுறை 46, ஆடுதுறை 54, ஆடுதுறை 56, கோ (ஆர்) 50, திருச்சி 3, திருச்சி 4, ஐஆர் 20, டிகேஎம்.13, மேம்படுத்தப் பட்ட வெள்ளை பொன்னி ஆகிய ரகங்க ளின் தரமான விதைகளை தேர்வு செய்து விதைப்பது அவசியமாகும். பருவத்துக்கு ஏற்ற நெல் பயிரில் ரகங்களை தேர்வு செய்து விதைக்கும் விவசாயிகள் ரகங்களின் தரங்களை அறிந்து விதைப்பது மிகவும் அவசியம். தரமான அதிக முளைப்புத் திறனு டைய விதைகளை விதைப் பரிசோ தனை செய்து விதைப்பு மேற்கொண் டால் உயர் விளைச்சல் பெறலாம். விதையின் ஈரப்பதத்தை பொறுத்த வரை அதிகபட்சமாக 13 விழுக்காடு இருக்க வேண்டும். பிற ரகக் கலவைப் பொறுத்தமட்டில் சான்று நிலை விதை களுக்கு 0.20 விழுக்காட்டுக்குள்ளும், ஆதார நிலை விதைகளுக்கு 0.05 விழுக் காட்டுக்குள்ளும் இருக்கவேண்டும். தஞ்சாவவூர் மாவட்டத்தில் உள்ள விதை உற்பத்தியாளர்கள், விதை விநி யோகம் செய்பவர்கள், விதை விற்ப னையாளர்கள் மற்றும் விவசாயிகள் விதைகளில் புறத்தூய்மை, ஈரப்பதம், முளைப்புத் திறன் மற்றும் பிற ரக விதைக் கலப்பு ஆகியவற்றை மிகத் துல்லியமாக அறிந்து கொள்ள விதை பரிசோதனை நிலையத்தில் விதையை பரிசோதனை செய்து கொள்ளலாம். விதை பரிசோதனை மேற்கொள்ள 100 கிராம் நெல் விதை மாதிரியுடன் ஒரு மாதிரிக்கு ரூ.80 கட்டணம் செலுத்தி, தஞ்சாவூர் விதை பரிசோதனை நிலை யத்தை அணுகி பயன்பெறலாம்” எனக் கூறப்பட்டுள்ளது.