districts

img

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயர்த்தி வழங்க கோரி மறியல் போர்

தஞ்சாவூர், டிச.14 - ஊனமுற்றவர்களுக்கு ரூ.3 ஆயிரம், கடும் ஊனமுற்றவர்களுக்கு ரூ. 5 ஆயிரம், மாதாந்திர உதவித் தொகையாக தமிழக அரசு வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் மாதாந்திர பராமரிப்பு உதவித் தொ கையாக நமது அண்டை மாநில மான புதுச்சேரியில் 3,800ம், தெலுங் கானாவில் 3,016ம் வழங்கப்படுவது போல், தமிழகத்திலும் உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் மாநிலம் தழுவிய மறியல் போ ராட்டம் செவ்வாய்க்கிழமை நடை பெற்றது.  தஞ்சாவூர் மாநகராட்சி அலுவல கம் முன்பு நடைபெற்ற போராட்டத் திற்கு, மாநில பொதுச் செயலாளர் எஸ்.நம்புராஜன் தலைமை வகித் தார். மாநகர துணைத் தலைவர் பி. சங்கிலிமுத்து, மாவட்ட பொருளா ளர் எஸ்.சிவப்ரியா, மாவட்ட துணைச் செயலாளர் பி.கிருஷ்டி, தஞ்சை  ஒன்றியப் பொருளாளர் ராதிகா, சாமி யப்பன், மாநகர துணைச் செயலா ளர் சிவபிரசாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பட்டுக்கோட்டை வருவாய் கோட் டாட்சியர் அலுவலகம் முன் நடை பெற்ற போராட்டத்திற்கு, என்.ஜெய பால முருகன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் கே. கிருஷ்ணமூர்த்தி கோரிக்கை விளக்க உரையாற்றினார். பேராவூரணி ஒன்றியச் செயலாளர் ஏ.வின்சென்ட் ஜெயராஜ், சேதுபாவாசத்திரம் ஒன்றியப் பொறுப்பாளர் ஏ.மேனகா, மதுக்கூர் ஒன்றியத் தலைவர் ஆர்.எம்.பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  திருவோ ணத்தில் ஒன்றியத் தலைவர் எஸ். ஆர்.திருமேனி தலைமை வகித் தார். ஒன்றியச் செயலாளர் வி.எம். செந்தில்குமார், ஒன்றிய பொருளா ளர் லதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

ஒரத்தநாட்டில் ஒன்றியச் செயலா ளர் யு.பிரபாகரனும், திருவிடைமரு தூர் வடக்கில் சுகுமாரும், திருப்பனந் தாளில் ஏ.எஸ்.பாரதியும் தலைமை வகித்தனர். நாகப்பட்டினம் நாகப்பட்டினம் தாலுகா அலுவ லகத்தில் நடைபெற்ற போராட் டத்திற்கு மாவட்ட குழு உறுப்பினர் பி.எம்.லெனின் தலைமை வகித் தார். கோரிக்கைகளை விளிக்கி மாவ ட்டக் குழு உறுப்பினர் கே.எஸ்.செந்தில்குமார் பேசினார். நாகை  ஒன்றிய செயலாளர் பி.அசோக் குமார், நாகை நகர செயலாளர் கே.ஏ.எஸ்.நாதன், திருமருகல் ஒன்றிய செயலாளர் ஜி.ராமச்சந்தி ரன் ஆகியோர் கலந்து கொண்டனர். மயிலாடுதுறை மயிலாடுதுறை மாவட்டத்தில், தரங்கம்பாடி, சீர்காழி, குத்தாலம் வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பும், மயிலாடுதுறையில் கோட் டாட்சியர் அலுவலகம் முன்பும் மறி யல் போராட்டங்கள் நடைபெற்றன.  மயிலாடுதுறையில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் டி.கணேசன், தரங்கம்பாடியில் ஒன்றிய தலைவர் ஜி.செல்வராஜ், சீர்காழியில் வட்டத் தலைவர் நாகராஜ், குத்தாலத்தில் ஒன்றிய செயலாளர் சண்முகம் தலை மையில் நடந்த போராட்டத்தில் 200 -க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனா ளிகள் கலந்து கொண்டனர்.

திருச்சிராப்பள்ளி

திருச்சி மாநகர் மாவட்டக்குழு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் அருகில் சாலை மறியல் போராட் டம் நடைபெற்றது. சங்க மாவட்ட செயலாளர் கோபிநாத் தலைமை வகித்தார். போராட்டத்தை மாநகர் மாவட்ட தலைவர் ஜெயபால் துவக்கி வைத்தார்.