districts

திருச்சி முக்கிய செய்திகள்

மரக்கன்றுகள் வழங்கும் விழா

தஞ்சாவூர், ஜன.1- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே ரெட்ட வயல் கடைத்தெருவில், அன்னை அமராவதி நூல கம் திறப்பு விழா மற்றும் மரக் கன்றுகள் வழங்கும் விழா, திங்கள்கிழமை நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு அன்னை அம ராவதி அறக்கட்டளை தலை வர் முனைவர் ஆ.ஜீவானந்தம் தலைமை வகித்தார். தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கம் களச் செயலாளர் கே.வி.முத்தையா வரவேற்றார். கவி ஞர் கே.கான்முகமது நூல கத்தை திறந்து வைத்தும், ரெட்ட வயல் ஊராட்சி மன்றத் தலை வர் தமிழ்செல்வி கண்ணன் பொதுமக்களுக்கு மரக்கன்று கள் வழங்கியும் வாழ்த்திப் பேசினர். தமவிக பொதுச் செயலா ளர் தங்க.குமரவேல், தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் வீ. கருப்பையா, விவசாயத் தொழி லாளர்கள் சங்கம் வ.ராஜமா ணிக்கம், சமூக ஆர்வலர் வீரக்குடி ராசா, திராவிடர் கழகம் ப.மகாராசா உள்ளிட்டோர் பேசினர். அறக்கட்டளை உறுப் பினர் அமரா அழகு நன்றி கூறினார். இதில், மரக்கன்றுகளை சிறப்பாக வளர்க்கும் பொது மக்களுக்கு பரிசுகள் வழங்கப் படும் என அறிவிக்கப்பட்டது. 

உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர உதவிய எம்எல்ஏ

தஞ்சாவூர், ஜன.1- தஞ்சாவூர் மாவட்டம் பேரா வூரணி அருகே உள்ள மருங்கப் பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த வர் பழனியப்பன் (49). இவர் ஆந்திராவில் ரெடி மிக்ஸ் சிமெண்ட் நிறுவனத்தில் ஓட்டுந ராக வேலை செய்து வரு கிறார்.  இந்நிலையில், சனிக் கிழமை காலை ஆந்திர மாநி லம், நெல்லூரில் தான்  வேலை செய்து கொண்டி ருந்த லாரியில் இருந்து தவறி கீழே விழுந்து, தலையில் படுகா யமடைந்து சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி பலியானார்.  இவருக்கு மனைவி சத்யா, நடக்க முடியாத - படுத்த படுக்கையாக கிடக்கும் சபரி (24) என்ற மாற்றுத்திறனாளி மகன் மற்றும் இரு மகள்கள்  உள்ளனர். ஒரு மகளுக்கு மட்டும் திருமணம் முடிந்து விட்டது.  ஏழ்மை நிலையில் உள்ள  இவரது குடும்பம் மருங்கப் பள்ளம் கிராமத்தில் வசித்து வருகின்றது. இந்நிலையில் உடற்கூறாய்வுக்குப் பிறகு, பழ னியப்பனின் சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு வரு வதற்கான ஆம்புலன்ஸ் கட்ட ணத்தை இவர்களால் செலுத்த  முடியவில்லை. இதையடுத்து, அவரது  குடும்பத்தினர் பேராவூரணி  எம்எல்ஏ நா.அசோக்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். நா. அசோக்குமார், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியனை தொலைப்பேசி யில் தொடர்பு கொண்டு பேசி னார்.  தொடர் நடவடிக்கையாக, தமிழக அரசின் சிறப்பு ஆம்பு லன்ஸ் மூலம் பழனியப்பன் சடலம், ஆந்திர மாநில எல்லை யில் இருந்து சொந்த ஊரான மருங்கப்பள்ளம் வரை எவ்வித செலவும் இன்றி கொண்டு வரப்பட்டது. திங்கள்கிழமை காலை பழனியப்பனின் இறுதிச் சடங்கு சொந்த ஊரில் நடை பெற்றது. பின்னர், பழனி யப்பன் வீட்டிற்கு சென்ற எம்எல்ஏ நா.அசோக்குமார் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.  சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு வர உத விய எம்எல்ஏ நா.அசோக் குமாருக்கும், சுகாதாரத் துறை அமைச்சருக்கும், தமிழ்நாடு அரசுக்கும் பழனியப்பனின் மனைவி, குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நன்றி தெரிவித்தனர்.

ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் விலையை பாதியாக குறைக்க வேண்டும்

மீனவர் நலவாரிய துணைத் தலைவர் கோரிக்கை

தஞ்சாவூர், ஜன.1 -  ஒன்றிய பாஜக அரசு, தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி, பெட்ரோல்  - டீசல் விலையை பாதியாக குறைக்க  வேண்டும் என தமிழ்நாடு மீனவர் நலவா ரிய துணைத் தலைவர் மல்லிப்பட்டினம் தாஜுதீன் கோரிக்கை விடுத்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மன்மோகன்சிங் தலை மையில் ஐக்கிய முன்னணி ஆட்சியில்  இருந்தபோது கச்சா எண்ணெய் பீப்பாய் டாலர் 160 வரை உயர்ந்த போதும் பெட்ரோல் லிட்டர் ரூ.60- க்கும், டீசல் ரூ.52-க்கும் விற்பனையா னது.  மோடி தலைமையிலான பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற 2014 முதல், தற்போது வரை பீப்பாய் டாலர் 140  லிருந்து 71 டாலர் வரை குறைந்து உள்ளது.  கச்சா எண்ணெய் விலை குறைந் தும், பாஜக ஆட்சியில் முன்னெப்போ தும் இல்லாத அளவிற்கு பெட்ரோல், டீசல் விலை உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் டீசலை பெரிதும் உப யோகப்படுத்தும் மீனவர்கள், விவசா யிகள், வியாபாரிகள் மிகவும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். விலை ஏற்றத்தால் எண்ணெய் நிறுவனங்கள் கொள்ளை லாபம் ஈட்டுகின்றன. பொது  மக்களின் செலவீனங்கள் கூடி, பொரு ளாதார நட்டத்திற்கு ஆளாகின்றனர்.  கார்ப்பரேட் முதலாளிகளைத் தவிர,  அனைத்து இந்திய குடிமக்களும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி,  ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பாஜக தனது தேர்தல் அறிக்கையில், ‘பெட்ரோல், டீசல் விலை பாதியாக குறைத்து வழங்கப்படும்’ என தெரி வித்ததன்படி, தற்போது பீப்பாய் 87 டால ராக உள்ள கச்சா எண்ணெய் விலையை  கணக்கில் கொண்டு, டீசல் லிட்டர் ரூ.50- க்கும், பெட்ரோல் ரூ.58-க்கும் வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும்” என தெரி வித்துள்ளார்.

இருசக்கர வாகனத்தில்  சாகசம்    மூன்று  பேர்களுக்கு அபராதம் 

தென்காசி, ஜன. 1 குற்றாலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் தொடர்ச்சியாக சாக சம் செய்தும் அபாயகரமான முறையில் வாகனத்தை இயக்கியும் அதனை வீடியோ பதிவு செய்து இன்ஸ்டா கிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்த இளைஞர்கள்  கைது  செய்யப்பட்டனர்.   தென்காசி செய்யது குருக்கள் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த செய்யது சுலைமான் தாதா பீர் (22),  தென்காசி ஜம்ஜம் நகர்   முகமது தெளபிக் (21),தென் காசி மாதா கோவில் ஒன்றாம் தெரு மணிகண்டன் (21)  ஆகியோர் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் ரூபாய்  10,000 அபராதம் விதிக்கப்பட்டு இருசக்கர வாகனம் பறி முதல் செய்யப்பட்டது. மேலும் இனிவரும் காலங்களில் இது போன்ற செயலில் ஈடுபட்டால் கைது செய்து சிறை யில் அடைக்கப்படுவர்   என்று  போலீசார்  எச்சரிக்கை  விடுத்துள்ளனர் . 

குழித்துறையில் இன்று மக்களுடன் முதல்வர் முகாம்

குழித்துறை,  ஜன. 1  குமரி மாவட்டம் குழித்துறை நகராட்சி சார்பில் மக்களு டன் முதல்வர் முகாம் குழித்துறை விஎல்சி திருமண மண்டபத்தில்  செவ்வாயன்று  துவங்குகிறது.இரண்டு நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது.   காலை 10  மணி முதல் 3 மணி வரை வார்டு 1 முதல் வார்டு 10  வரையும் ,இரண்டாம் நாள் 11 முதல் 21 வார்டிலும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது .எரிசக்தி துறை ,தமிழ் நாடு மின்சார வாரியம் ,வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ,நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை , ஊ ரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை,  காவல்துறை ,மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ,தொழி லாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை ,சமூக  நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ,ஆதி திராவிடர் போன்ற துறை அதிகாரிகள்  முகாமில் கலந்து கொண்டு பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு சேவை கள் வழங்க உள்ளனர்.

தூய பனிமயமாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி 

தூத்துக்குடி , ஜன. 1 2024 ஆம் ஆண்டு புத்தாண்டை வரவேற்கும் வகை யில் தூத்துக்குடியில் உள்ள உலகப் புகழ்பெற்ற தூய  பனிமய மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடை பெற்றது. பேராலய பங்குத்தந்தை குமார் ராஜா தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு இந்த ஆண்டு மக்கள் அனைவரும் சுபிட்சமாக வாழ பிரார்த்தனை மேற்கொண்டனர். மேலும் எந்த ஒரு பேரிடரும் வராமல் உலக மக்கள்  அனைவரும் அமைதியாக வாழவும் பிரார்த்தனை மேற்கொண்டனர். இந்த புத்தாண்டு திருப்பலியில் ஏராளமான கிறிஸ்த வர்கள் கலந்து கொண்டு புத்தாண்டு வாழ்த்துக்களை ஒரு வருக்கு ஒருவர் பரிமாறிக் கொண்டனர். இதுபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

கல்லூரி மாணவர்  தூக்கிட்டு தற்கொலை

 தூத்துக்குடி , ஜன. 1 ஓட்டப்பிடாரம் அருகே மேலசுப்பிரமணியபுரம் கிழக்குத் தெருவை சேர்ந்த செல்லச்சாமி மகன் அருண் ராஜ் (18) என்பவர் குறுக்குச்சாலை பகுதியில் உள்ள தனி யார் கல்லூரி ஒன்றில் பிஏ இரண்டாம் ஆண்டு  படித்து  வந்துள்ளார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை  இரவு அருண் ராஜ் புது வருட பிறப்பை முன்னிட்டு வீட்டில் ரேடியோ போட்டு டான்ஸ் ஆட வேண்டுமென குடிபோதையில் சண்டையிட்டு வாக்குவாதம் செய்துள்ளார்.  இந்நிலையில் அவரது அம்மா தூங்க  சென்றுள் ளார்.தொடர்ந்து நள்ளிரவு அவரது அம்மா வீட்டின் வெளியே வந்து பார்க்கையில் வீட்டின் அருகில் இருந்த வேப்பமரத்தில் அருண்ராஜ் தூக்கில் தொங்கிய நிலை யில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த ஓட்டப்பிடாரம் போலீசார் சம்பவ  இடத்திற்கு விரைந்து சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அருண்ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.

இளைஞர் வெட்டி கொலை: 3 பேர் கைது

தூத்துக்குடி , ஜன. 1 தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள  சித்தவநாயக்கன்பட்டி அரசு மதுபான கடை அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, விளாத்திகுளம் காம ராஜர் நகர் பகுதியில் சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் ஆறுமுகத்தை (35) சில மர்ம நபர்கள் கத்தி யால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடினர். இதனை அடுத்து  ஆறுமுகத்தின் உடலை பிரேத பரிசோத னைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து தீவிர  விசாரணை மேற்கொண்டு வந்தார் விளாத்திகுளம் ஆய்வாளர் வெங்கடேசபெருமாள்,. குற்றவாளிகளான விளாத்திகுளம் வேம்பார் ரோடு பகுதியை சேர்ந்த  செந்தில்குமார்(26), செல்வகுமார்  (21), முத்துமாரியம் மன்(24), ஜெயக்குமார் (23), ஆகிய நான்கு பேரும்  சேர்ந்து முன்விரோதம் காரணமாக ஆறுமுகத்தை கத்தி யால் வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து செல்வகுமார், முத்துமாரியம்மன்,ஜெயக்குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்து விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் சிறையில்அடைத்தனர். தப்பி ஓடிய  செந்தில்குமாரை விளாத்திகுளம் காவல் நிலைய போலீ சார் தேடி வருகின்றனர்.

குமரியில் வண்ணமிகு புத்தாண்டு கொண்டாட்டம்

நாகர்கோவில், ஜன. 1- குமரி மாவட்டத்தில் புத்தாண்டை வர வேற்கும் வகையில் பல வண்ண விளக்கு களால் தேவாலங்கள், வர்த்தக நிறுவ னங்கள் அலங்கரிக்கப்பட்டிருந்தன. கடந்த  ஆண்டின் கடைசி சூரிய மறைவையும், புதிய  ஆண்டின் முதல் சூரிய உதயத்தையும் காண கடற்கரையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து கண்டு களித்தனர். புத்தாண்டை கொண்டாட கன்னியாகுமரி யில் டிச.31 ஞாயிறன்று மாலையே ஆயிரக் கணக்கான மக்கள் வெளியூர்களில் இருந்து  குவிந்திருந்தனர். நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டம் மாலையே களை கட்டியது. கிராமிய கலை நிகழ்ச்சிகள், மேஜிக், குழந்தைகளுக்கான பல்வேறு போட்டிகள், ஆடல் பாடல் என உற்சாகம்  கரைபுரண்டது. நள்ளிரவு 12 மணிக்கு ஒரு வருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்துகளை கூறினர். இதுபோல், நாகர்கோவில், மார்த்தாண் டம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதி களில் நள்ளிரவில் சாலைகளுக்கு வந்த மக்கள் புத்தாண்டு வாழ்த்துகளைக் கூறி மகிழ்ச்சிiயுடன் புத்தாண்டை வரவேற்றனர். புத்தாண்டையொட்டி ஞாயிறன்றும் திங்க ளன்றும் சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம்  அலைமோதியது.