சமுதாய வளைகாப்பு விழா
தஞ்சாவூர், செப்.29- தஞ்சாவூர் மாவட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணி கள் திட்டம் சார்பில், பட்டுக்கோட்டையில் வெள்ளியன்று சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. மாவட்ட திட்ட அலுவலர் ராஜேஸ்வரி வரவேற்றார். பட்டுக் கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை, பேரா வூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் ஆகியோர் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு பொருட்களை வழங்கி வாழ்த்திப் பேசினர். நிகழ்ச்சியில் சேதுபாவாசத்திரம், பேராவூரணி, பட்டுக் கோட்டை, ஒரத்தநாடு, திருவோணம், மதுக்கூர் ஒன்றியங் களைச் சேர்ந்த சுமார் 600-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி களுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது. குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்த னர். சத்துணவுப் பொருட்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டி ருந்தன. கர்ப்பிணிகளுக்கு பேராவூரணி எம்எல்ஏ நா.அசோக் குமார் ஏற்பாட்டில் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
பேரூராட்சி மன்றக் கூட்டம்
பொன்னமராவதி, செப்.29 - புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் பேரூ ராட்சி மன்ற சாதாரணத் கூட்டம் மன்றத் தலைவர் சுந்தரி அழகப்பன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலை வர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் மு.செ.கணேசன் வரவேற்றார். கூட்டத்தில், 2023-24 ஆண்டிற்கு 15 வது நிதிக்குழு திட்டத்தின்கீழ் பணிகள் தேர்வு செய்தல், கசடு கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்திட இடம் தேர்வு செய்து கருத்துரு அனுப்பிட அனுமதித்தல், நகர்ப்புற ஆரம்ப சுகா தார நிலையம் அமைக்க அனுமதி கோரி கருத்துரு அனுப்பிட ஒப்புதல் வழங்கியது மற்றும் பிறப்பு-இறப்பு பதிவு செய்தல், வரி மற்றும் வரியற்ற இனங்கள் நிலுவை விபரம் உள்ளிட்டவை குறித்து தீர்மானிக்கப்பட்டது. பேரூராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
சுகாதார கணக்கெடுப்பு
பொன்னமராவதி, செப்.29 - புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேரூராட்சிப் பகுதியில் சுகாதார கணக்கெடுப்பு முகாம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை புதுக்கோட்டை மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர், திண்டுக்கல் காந்திகிராமம் அம்பாதுறை குடும்ப நல பயிற்சி மையம் ஆகியவை இணைந்து நடத்தும் கிராமப் புற சுகாதார மேம்பாடு, குடும்ப நலம், தடுப்பூசி மற்றும் இதர விவரங்கள் குறித்த ஆய்வு களப்பணி முகாம் பொன்னமரா வதி பேரூராட்சி பகுதியில் 3 நாட்கள் நடைபெற உள்ளது. என்ஜிஓ அலுவலர் தீபக் தலைமையில், 8 பேர் கொண்ட குழுவினருடன் நடைபெறும் இம்முகாமில் பொன்ன மராவதி சுகாதார ஆய்வாளர் தியாகராஜன், கிராம சுகாதார செவிலியர் மீனாள், இடைநிலை செவிலியர் திவ்யா ஆகி யோர் பங்கேற்றனர். இந்த கணக்கெடுப்பு பணிக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அக்.2 இல் கிராம சபைக் கூட்டம்
தஞ்சாவூர், செப்.29 - தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் அக்.2 (திங்கள்கிழமை) காந்தி ஜெயந்தி தினத்தன்று கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 11 மணிக்கு, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 589 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கிராம சபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சிகளின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பொதுமக்களுடன் அனைத்துத்துறை அலுவலர்களும் பங்கேற்று விவாதிக்கவுள்ளனர். எனவே தஞ்சாவூர் மாவட்டத்தின் கிராம ஊராட்சிப் பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.
விவசாயத் தொழிலாளர்கள் போராட்டம் ஒத்திவைப்பு
பொன்னமராவதி, செப்.29 - புதுக்கோட்டை மாவட்டம் பொன்னம ராவதி ஒன்றியம் முள்ளிப்பட்டி ஊராட்சியில் வசிக்கும் ஏழை மக்களை வறுமைக் கோட்டு பட்டியலில் முறையாக சேர்க்க வேண்டும். முள்ளிப்பட்டி ஊராட்சியில் நூறு நாள் வேலை திட்டத்தில் வெளியூரில் வசிக்கிற வர்களுக்கு, மோசடியாக ஊதியம் வழங்கு கிற ஊராட்சி மன்றத்தை கண்டித்தும், தேசிய ஊரக வேலை வாய்ப்பு சட்டத்தின் படி முள்ளிப்பட்டி ஊராட்சியில் ஆய்வு நடத்த வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கடந்த வாரம் மேலத்தானி யத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில், மேற்கண்ட கோரிக்கை களை நிறைவேற்றாத ஒன்றிய நிர்வாகத்தை கண்டித்து செப்.29 அன்று, சங்கத்தின் சார்பில் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலு வலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் செப்.27 அன்று பொன்னம ராவதி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட் சியர் பிரகாஷ் தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து முற்றுகை போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. பேச்சுவார்த்தையில், பொன்னமராவதி வட்டார வளர்ச்சி அலுவலர் கருணாகரன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் பக்ருதீன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டக் குழு உறுப்பினர் நல்லதம்பி, விதொச ஒன்றி யச் செயலாளர் ராமசாமி, மாதர் சங்கத்தின் அம்சவல்லி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இலவச கண் பரிசோதனை முகாம்
தஞ்சாவூர், செப்.29 - தஞ்சை மாவட்டம் பேராவூரணி டாக்டர் ஜே. ஸி.குமரப்பா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் லயன்ஸ் சங்கம், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகியவை இணைந்து கண் பரிசோ தனை முகாம் நடத்தின. லயன்ஸ் சங்கத் தலைவர் சிவநாதன் தலைமை வகித்தார். செயலாளர் ராஜா வர வேற்றார். ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பேரா வூரணி கிளை மேலாளர் இளமாறன் முகாமைத் தொடங்கி வைத்தார். லயன்ஸ் மாவட்ட அவை கூடுதல் செயலாளர் ராம மூர்த்தி, மாவட்ட அவை இணை பொருளாளர் கனகராஜ், மண்டலத் தலைவர் ராமஜெயம், வட்டாரத் தலைவர் குட்டி யப்பன் ஆகியோர் பேசி னர். முகாமில் 553 பேர் கலந்து கொண்டு இலவச கண் பரிசோதனை செய்து கொண்டனர். அவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் இலவச மாகவும், கண் கண்ணாடி சலுகை விலையிலும் வழங்கப்பட்டது. இவர் களில் கண் பார்வைக் குறைபாடு உடைய 209 பேர் கண் அறுவை சிகிச்சைக்காக மதுரை அரவிந்த் கண் மருத்து வமனை அழைத்துச் செல்லப்பட்டனர். பொரு ளாளர் பழனியப்பன் நன்றி கூறினார்.
மின்னல் தாக்கி 2 ஆடுகள் பலி
அய்யம்பேட்டை, செப்.29 - தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையை அடுத்த கணபதி அக்ர ஹாரம் பாலக்கரையில் வசித்து வருபவர் மாரி (58). இவர் கணபதி அக்ர ஹாரம் ஊராட்சியில் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வருகிறார். மேலும், தனது வீட்டின் பின்புறத்தில் உள்ள ஒரு கொட்டகையில் ஆடு களை வளர்த்து வரு கிறார். இந்நிலையில் புத னன்று இரவு இப்பகுதி யில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. அப் போது மின்னல் தாக்கிய தில், மாரி வீட்டின் பின்புறம் கட்டியிருந்த 2 ஆடுகள் உயிரிழந்தன. மாரியின் வீட்டிலிருந்த டி.வி. உள்ளிட்ட மின்சாத னப் பொருட்களும் சேத மடைந்தன. இதுகுறித்து தகவலறிந்த கணபதி அக்ரஹாரம் ஊராட்சி மன்றத் தலைவர் சர வணன், கிராம நிர்வாக அலுவலர் யோகராஜ் ஆகியோர் சம்பவ இடத் தினை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மாரி குடும் பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
எஸ்.ஐ. கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள்
புதுக்கோட்டை, செப். 29 - கடந்த 2021 இல் ஆடு திருடர்களை விரட்டிச் சென்ற காவல் உதவி ஆய்வா ளர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து மாவட்ட முதன்மை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது. திருச்சி நவல்பட்டு காவல் நிலை யத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றியவர் பூமிநாதன் (55). இவர், கடந்த 2021 நவம்பர் 20 அன்று இரவு பூலாங்குடி குடியிருப்புப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியே 2 இரு சக்கர வாகனங்களில் வந்த ஆடு திருடர்களை சுமார் 15 கி.மீ தொலைவுக்கு விரட்டி வந்தார். புதுக்கோட்டை மாவட்டம் பள்ளத்துப் பட்டி அருகே ரயில்வே சுரங்கப் பாதை பகுதியில் நவ.21 (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை சுமார் 2 மணியளவில் அவர்களை மடக்கிப் பிடித்த போது, அவர்கள் உதவி ஆய்வாளரை வெட்டிக் கொன்றனர். இச்சம்பவத்தில் வழக்குப் பதிவு செய்த கீரனூர் போலீ சார், கல்லணை அருகேயுள்ள தோகூரைச் சேர்ந்த மணிகண்டன் (21) மற்றும் இரு சிறார்களைக் கைது செய்தனர். இந்த வழக்கு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. மாவட்ட அரசு வழக்குரைஞர் பா. வெங்கடேசன் ஆஜராகி வாதாடினார். இவ்வழக்கில் 47 சாட்சிகள் விசாரிக் கப்பட்டனர். 200-க்கும் மேற்பட்ட பக்கங் களில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கொலை நடந்த பகுதிகளை மாவட்ட முதன்மை நீதிபதி பூர்ண ஜெயா ஆனந்த் அண்மையில் நேரில் பார்வையிட்டார். இதன் தொடர்ச்சியாக இவ்வழக்கில் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப் பட்டது. குற்றம் சாட்டப்பட்ட மணிகண்ட னுக்கு கொலைக் குற்றத்துக்காக ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், செல்லிடப்பேசி உள்ளிட்டவற்றை உடைத்த குற்றத்துக் காக 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும், சாட்சியங் களைக் கலைக்க முயற்சித்த குற்றத்துக் காக 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதி பதி தீர்ப்பளித்தார். மேலும், குற்றம் நடைபெற்ற நேரத் தில் போலீஸ் காவலில் குற்றவாளி இல்லை என்பதால், போலீஸ் காவலில் இருந்து தப்ப முயற்சித்த குற்றப் பிரிவில் இருந்து மணிகண்டன் விடுவிக்கப்பட் டார். இதே வழக்கில் கைது செய்யப்பட்ட இரு சிறார்களின் வழக்கு, இளஞ்சிறார் நீதிக் குழுமத்தில் தனியே நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.