அறந்தாங்கி, ஜூலை 22-
புதுக்கோட்டை மாவட்டம் அறந் தாங்கி ரோட்டரி கிளப் 41 ஆம் ஆண்டு நிர்வாகிகள் பணி ஏற்பு மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா அறந்தாங் கியில் நடைபெற்றது. உடனடி முன்னாள் தலைவர் டாக்டர் பிரேம்குமார் வரவேற் றார். 2023-24 ஆம் ஆண்டின் புதிய தலைவராக விஜி.செந்தில்குமார், செய லாளராக ஆகவி.தவசிமணி, பொருளா ளராக பி.ஜோசப் ஸ்டாலின் ஆகி யோரை ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஆனந்த ஜோதி ராஜ்குமார் பதவிப் பிர மாணம் செய்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், வறுமையில் வாடும் கணவனை இழந்த பெண் களுக்கு, ‘சிங்கப்பெண்ணே’ திட்டத்தின் கீழ் இ-ஆட்டோவிற்கான முன்பணம் ஒரு லட்சம் ரூபாயை மாவட்ட ஒருங் கிணைப்பாளர் பீர் சேக் வழங்கினார். செயலாளர் வி.தவசுமணி நன்றி கூறினார்.