districts

img

சாலைப் பணியாளர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

திருப்பூர், செப். 23 - தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் வெள் ளிவிழா மாநில மாநாட்டின் அறைகூவல் படி, காங்கேயம், உடுமலை மூலனூர்,  அவிநாசி ஆகிய பகுதிகளில் சாலைப்  பணியாளர்கள் கோரிக்கை  ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. காங்கேயம் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர் அலுவ லகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப் பாட்டத்தில் மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும், மாநில நெடுஞ் சாலை ஆணையம் அமைப்பதால் 4000த்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் ஒழிக்கப்படும், கிராமப்புற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு பறிபோகும், சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க  காலத்தை பணிக் காலமாக முறைப்ப டுத்தி ஆணை வழங்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கை முழக்கம் எழுப்பப்பட் டது. உட்கோட்ட துணைத் தலைவர் துரையன் தலைமை ஏற்றார். இணைச்  செயலாளர் ஜெகநாதன் வரவேற்றார். உட்கோட்ட செயலாளர் ஆர்.முத்துச் சாமி கோரிக்கைகளை விளக்கிப் பேசி னார். கோட்டச் செயலாளர் ஆர் ராமன் நிறைவுரை ஆற்றினார். உட் கோட்ட பொருளாளர் செல்லத்துரை நன்றி கூறினார். தாராபுரம் கோட்டம் மூலனூர் உதவி  கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு உட்கோட்டத் தலைவர் ப.சுப்பிரமணியன்  தலைமை ஏற்றார். உட்கோட்டச் செயலா ளர் சு.சிவராசு கோரிக்கையை விளக்கிப்  பேசினார்.  சாலை ஆய்வாளர் சங்கம்  சார்பில் தா சந்திரகுமார், கோட்ட இணைச் செயலாளர் ஆ.மணிமொழி ஆகியோர் வாழ்த்தி பேசினர். கோட்ட துணைத் தலைவர் ர.செல்வகுமார் நிறை வுரை ஆற்றினார். கோட்ட செயற்குழு உறுப்பினர் ப.சண்முகம் நன்றி கூறி னார்.  இந்த ஆர்ப்பாட்டத்தில் சாலைப்  பணியாளர்கள் சங்கத்தினர் சுமார் 25 பேர் கலந்து கொண்டனர்.  உடுமலைபேட்டை: நெடுச்சாலைத்துறை உதவி கோட் டப் பொறியாளர் அலுவலகத்தின் முன்பு  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு உட் கோட்டத் தலைவர் ஜெகதீஸ்வரன் தலைமை வகித்தார். கோட்ட செயற் குழு உறுப்பினர் மாரிமுத்து முன்னிலை  வகித்தார். கோட்ட இணைச் செயலாளர் சிவக்குமார் ஆர்ப்பாட்டத்தை துவக்கி  வைத்து பேசினார். கோட்ட இணைச்  செயலாளர் செல்லமுத்து, உட்கோட்டச்  செயலாளர் பஞ்சாட்சரம், நெடுஞ் சாலை கூட்டமைப்பின் மண்டலத்தலை வர் வைரமுத்து மற்றும் அரசு ஊழியர்  சங்க மாவட்ட இனைச் செயலாளர் பால கிருஷ்ணன் ஆகியோர் கோரிக்கை களை விளக்கி பேசினர். முடிவில்,  சங்கத்தின் மாநிலத் தலைவர் பாலசுப் பிரமணியம் நிரைவுரையாற்றைனார். அவிநாசி: அவிநாசியில் நெடுஞ்சாலை அலுவ லகம் முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலைப் பணியாளர் சங்கம் சார் பில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட நிர்வாகி ராமன், அவி நாசி வட்ட கிளை நிர்வாகி கருப்பன் உட் பட பலர் கலந்து கொண்டனர்.