கரூர், ஜூன் 18-
தமிழ்நாடு அரசு உழியர் சங்கத்தின் மாநில முன்னாள் துணைத் தலைவரும், தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கத்தின் மாநில முன்னாள் தலைவருமான எம்.சுப்பிரமணியன் ஏப்ரல் மாதம் பணி ஓய்வுபெற்றார். அவருக்கு தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளு னர் சங்கத்தின் கரூர் மாவட்டக் குழு சார்பில் பணி ஓய்வு பாராட்டு விழா நடைபெற்றது.
விழாவிற்கு மாவட்டத் தலைவர் ஆர்.சுரேஷ்குமார் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பு செயலாளர் ஆர்.பிரேம்குமார் வரவேற்றுப் பேசினார். தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனர் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் யு.சண்முகம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் எம்.செல்வராணி, மாவட்டச் செயலாளர் கெ. சக்திவேல், மாவட்டப் பொருளாளர் பொன்ஜெயராம், மருந்தாளுனர் சங்க மாநிலச் செயலாளர் க.இளங்கோ, மாவட்டச் செயலாளர் எம்.சக்தி வேல் ஆகியோர் பாராட்டிப் பேசினர். மாவட்டப் பொருளாளர் ஞானபா ரதி நன்றி கூறினார். புகழேந்தி, குமரேசன், முஸ்தபா, சிவசண்முகம், கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.