districts

முறைகேடு செய்த பணியாளர்களை மீண்டும் பணியில் சேர்க்க எதிர்ப்பு

பெரம்பலூர், பிப்.27 - முறைகேட்டில் ஈடுபட்ட பணியாளர் களை மீண்டும் பணியில் சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து பால் உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு சங்கத்தை முற்று கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் அருகே உள்ள சிறு வாச்சூர் கிராமத்தில் செயல்பட்டு வரும்,  பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் 180-க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் உறுப்பினராக உள்ளனர். இவர்கள் வளர்க்கும் கால்நடை கள் மூலம் காலையில் 2000 லிட்டரும்,  மாலையில் 2000 லிட்டரும் என மொத்தம் 4000 லிட்டர் பால் உற்பத்தி செய்யப்பட்டு, சிறுவாச்சூர் பால் உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் வழங்கி  வருகின்றனர். இந்நிலையில் கூட்டுறவு சங்கத்தில்  பணியாற்றும் விற்பனையாளர் ரங்க நாதன், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் முத்து சாமி, உதவியாளர் மூர்த்தி ஆகியோர் தலா மூன்று உறுப்பினர்கள் பெயரில், கணக்குப் பதிவு செய்து, பால் உற்பத்தி யாளர்கள் ஊற்றும் பாலில் யாருக் கும் தெரியாமல் தண்ணீரை கலக்கின்ற னர். இவற்றை காலை மற்றும் மாலை  வேளைகளில் தலா 35 முதல் 40 லிட்டர்  வீதம் பால் ஊற்றி மோசடி செய்து பணத்தை பெற்று வருவது பால் உற்பத்தி யாளர்களுக்கு தெரிய வந்துள்ளது. இது தொடர்பான வீடியோ ஆதாரத் துடன் கூட்டுறவு சங்கங்களின் துணைப்  பதிவாளர் ஜெயபாலிடம், பால் உற்பத்தியாளர்கள் அளித்த புகாரின் பேரில் ரெங்கநாதன், முத்துசாமி, மூர்த்தி  ஆகிய மூவரும் பணி நீக்கம் செய்யப் பட்டிருந்தனர். இந்நிலையில், மீண்டும் மேற்கண்ட  மூவரும் பணியில் சேர்வதற்கான உத்த ரவை கூட்டுறவு துறை அதிகாரிகள் வெளியிட்டனர். இந்நிலையில், அதற்கு  எதிர்ப்பு தெரிவித்து பால் உற்பத்தியா ளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிறு வாச்சூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டு றவு சங்கத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த கூட்டுறவுத் துறை அதி காரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பால் உற்பத்தியாளர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். முன்னதாக, முறைகேட்டில் ஈடுபட்ட வர்களை மீண்டும் பணியில் ஈடுபடுத்தக்  கூடாது என பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட வந்தனர். இந்நிலையில், சிறுவாச்சூரை சேர்ந்த பால் உற்பத்தியாளரான தனுஷ் (21)  என்பவர் தகாத வார்த்தையால் பேசிய வாறு பால் கொள்முதல் நிலையத்திற் குள் சென்றதால், போராட்டத்தில் ஈடு பட்டவர்களுக்கும் அவருக்கும் இடையே  கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.