புதுக்கோட்டை, பிப்.27 - புதுக்கோட்டை மாவட் டம் மணமேல்குடி கிராமத் தில் வசித்து வரும் 150 இந்து ஆதியன் சமூக மக்களுக்கு பழங்குடியினச் சான்றிதழ் வழங்கக் கோரி, அப்பகுதி யைச் சேர்ந்த சமூக ஆர்வ லர் கரு.ராமச்சந்திரன் முதல்வருக்கு மனு அனுப்பி யுள்ளார். அந்த மனுவில், “புதுக் கோட்டை மாவட்டம் மண மேல்குடி கிராமத்தில் 150 இந்து ஆதியன் சமூக மக்கள் (பூம்பூம் மாட்டுக்கா ரர்) நீண்ட காலமாக சமூகத் தின் விளிம்புநிலையில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் முழுமையாக சமூக நீதியைப் பெற வேண்டு மானால், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உரிய இடஒதுக்கீட்டைப் பெற அதற்கான பழங்குடியினச் சான்றிதழ் அவசியம். இதில், இச்சமூக மக்களை முறையாக அடை யாளம் காண்பதில் சிக்கல் கள் ஏற்படுகின்றன. எனவே, மானுடவியலாளரை நிய மித்து நேரில் களஆய்வு நடத்தி அந்த அறிக்கை யின்பேரில் சான்றிதழ் வழங்க சட்டம் உள்ளது. இதன்படி, மானுடவிய லாளர் வ.அமுதவள்ளுவன் என்பவரை களஆய்வுக்காக அரசு நியமித்து, அந்த ஊரில் களஆய்வு நடத்தி அறிக்கை பெற்று சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறப்பட்டு உள்ளது. இந்த கோரிக்கை மனு வின் நகல், மாநில ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி யின ஆணையத்தின் துணைத் தலைவர் எழுத்தா ளர் இமயம், மாநில பழங்குடி யினத் துறையின் இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.