districts

‘நெகிழி ஒழிப்பு’ தமிழக அரசின் முயற்சிக்கு வரவேற்பு

பாபநாசம், நவ.29 - தமிழக அரசு சுற்றுச்சூழல் அக்கறையு டன் நெகிழியை கட்டுப்படுத்த பல்வேறு நடவ டிக்கைகளுக்கான அரசாணை வெளியிட்டு உள்ளதை மனித நேய மக்கள் கட்சியின் தலை வரும் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினரு மான பேரா.ஜவாஹிருல்லா வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நெகிழிக் குப்பைகளை உற்பத்தி செய்யும்  நிறுவனங்களுக்குக் கடிவாளம் போடுவதும் அதேநேரத்தில் மக்களுக்கு நெகிழி மற்றும் அதன் மாற்றுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் மிக அவசியம். இவை இரண்டும் தமிழக அரசின் அரசாணையில் கவனம் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.  நிறுவனங்களை தம் குப்பைகளுக்கு பொறுப்பாக்கும் “நீடித்த உற்பத்தியாளர் பொறுப்பு” குறித்தும், மீண்டும் ‘மஞ்சப்பை’  என்கிற இயக்கத்தைப் பற்றியும் அரசாணை  பிறப்பித்தது பொருத்தமான நடவடிக்கையா கும்.

மரபான - இயற்கை சார்ந்த தீர்வை  நோக்கி நகர்வதாக அரசாணை குறிப்பிட்டி ருப்பது பாராட்டத்தக்கது. சாலையோர வியாபாரிகள் பயன்படுத் தும் நெகிழிப் பொட்டலங்கள் போன்றவை தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில், பெரு நிறுவனங்களின் நொறுக்குத் தீனிப் பொட்ட லங்கள் போன்றவை இந்த அரசாணையில் தவிர்க்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது. மறுசுழற்சி செய்யத்தக்க நெகிழியை மறு சுழற்சி செய்வதும், மற்றவற்றை தடை செய்வ துமே ‘நெகிழிக் கழிவில்லா தமிழகத்தை’ உரு வாக்கும். நெகிழியை எரித்து அழிக்கும் சாம்பலாக் கிகள் மற்றும் பைராலிசிஸ் நிலையங்களை அமைப்பது  சுற்றுச்சூழலை மேலும் பாதிக் கச் செய்யும். எனவே இத்திட்டங்களையும் முதற்கட்டத்திலேயே மக்களின் உடல்நலன் மற்றும் சூழல் நலன் அடிப்படையில் உடனே  தடுத்து நிறுத்த வேண்டுமென தமிழக அரசை  மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக்  கொள்கிறேன்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;