districts

img

நாகல்குட்டை ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றுக!

சிபிஎம் ஆர்ப்பாட்டம் அரியலூர், பிப்.28 - ஆண்டிமடம் அருகே அணிக்குதிச்சான் ஊராட்சி கொங்கு நாட்டார் குப்பம் கிராமத்தில் 10 ஏக்கர், 80 பரப்பிலான நாகல்குட்டை ஏரி உள்ளது. இந்த ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி வட்டாட்சி யர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள  அணிக்குதிச்சான் ஊராட்சிக் குட்பட்ட நாட்டார் குப்பம் கிராமத்தில் நாகல்குட்டை ஏரி உள்ளது. இந்த ஏரியில்  உள்ள தனிநபர் ஆக்கிர மிப்பை அகற்றக் கோரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு கட்சி யின் வட்டச் செயலாளர் பரம சிவம் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று  பேசிய மாநிலக் குழு  உறுப்பினர் எஸ்.வாலண் டினா ஆக்கிரமிப்பை அகற்றி  பொதுமக்கள் பயன்பாட் டுக்கு கொண்டுவர வேண் டும் என்றார். இதில் மாநி லக் குழு உறுப்பினர் இளங் கோவன் உட்பட நூற்றுக்கும்  மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். சுமார் 10 ஏக்கர், 80 செண்டு ஏரி முற்றிலும் தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. சாத்தனப்பட்டு, குளப்பாடி, குடிக்காடு, கே.என்.குப்பம்  உள்ளிட்ட நான்கு கிராமங் களில் உள்ள பொதுமக்கள் இந்த ஏரி நீரை பயன்படுத்தி வருகின்றனர். கால்நடை தேவைகளுக்கும் இந்த ஏரி  நீர் பயன்படுத்தப்பட்டு வரு கிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்பின் படி, மாவட்ட நிர்வாகம் பல் வேறு கிராமங்களில், நீர்நிலைகளில் உள்ள ஆக் கிரமிப்புகளை அப்புறப்படுத் தியது. ஆனால் இந்த ஏரி ஆக்கிரமிப்பு குறித்து, மாவட்ட ஆட்சியரிடம் பல முறை மனுக்கள் அளித் தும் தற்போது வரை எந்த  நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. எனவே இந்த ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.