districts

திருச்சி முக்கிய செய்திகள்

மருத்துவமனை வெளிப்புற  நோயாளிகளுக்கு உணவு வழங்கல்

பாபநாசம், ஜன.15-  மனித நேய மக்கள் கட்சியின் 17 ஆம் ஆண்டு துவக்க விழா வை முன்னிட்டு, பாபநாசம் அரசு மருத்துவமனை வெளிப்புற நோயாளிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.  இதில் மாநில துணைப் பொதுச் செயலர் பாதுஷா உட்பட பங்கேற்றனர். இதேபோன்று ராஜகிரி, அய்யம்பேட்டை, சக்கராப் பள்ளி, வடக்கு மாங்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கட்சி கொடியேற்றப்பட்டது. இதில் கட்சி மாநில துணைப் பொதுச் செயலர் பாதுஷா பங்கேற்றார். மாவட்டத் தலைவர் ரகமத் அலி உட்பட மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பயிர் விளைச்சல் போட்டிக்கான  நெல் அறுவடை பணி

பாபநாசம், பிப்.15-  மாநில அளவிலான பாரம்பரிய நெல் பயிர் ரகத்துக்கான பயிர் விளைச்சல் போட்டிக்கான அறுவடை பணி கபிஸ்தலம் அருகே பொன்பேத்தி கிராமத்தில்  தேவேந்திரன் சாகுபடி செய்திருந்த ஆத்தூர் கிச்சடி சம்பா ரகத்தில் நடந்தது.  அறுவடை மகசூல் கணக்கெடுப்பு பணியை தஞ்சாவூர் வேளாண்மை துணை இயக்குநர் ஐயம் பெருமாள், திருவாரூர் வேளாண்மை துணை இயக்குநர்  விஜயலட்சுமி, விவசாய பிரதிநிதி முன்னோடி விவசாயி ராம தியாகராஜன், பாபநாசம் வேளாண்மை உதவி இயக்குநர் முகமது பாரூக், துணை வேளாண்மை அலுவலர் எபிநேசன் உட்பட பலர் கலந்து கொண்டு மகசூல் விபரங்களை கணக்கிட்டனர். இதற்கான ஏற்பாட்டினை வேளாண்மை உதவி அலுவலர்கள் சீனிவாசன்,பிரியா மற்றும் திரிபுர சுந்தரி செய்திருந்தனர்.

வட்டார அளவில் சிறார் திரைப்பட போட்டிகள்

தஞ்சாவூர், பிப்.15-  தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கான (6 முதல் 9 ஆம் வகுப்பு வரை) சிறார் திரைப்படப் போட்டிகள்  குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப் பள்ளி யில் நடைபெற்றன. கதை, வசனம், ஒளிப்பதிவு மற்றும் நடிப்பு  என மூன்று தலைப்புகளில் போட்டிகள் நடைபெற்றன. பள்ளியளவில் முதலிடம்  பெற்ற மாணவ, மாணவிகள் இப்போட்டி களில் கலந்து கொண்டனர். போட்டியை பள்ளி தலைமையாசிரியர்(பொ) சுபாஷ்க ரன் தலைமை ஏற்று துவக்கி வைத்தார். வட்டாரக் கல்வி அலுவலர்கள் எம்.கே. ராம மூர்த்தி, சு.சிவசாமி மற்றும் வட்டார வள மைய மேற்பார்வையாளர் அ. முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  இப்போட்டியில் 90 மாணவர்கள் கலந்து  கொண்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர் பயிற்றுநர் அ.ரா. சரவணன் செய்திருந்தார். வட்டார அளவில் முதலி டம் பெறும் மாணவர்கள், மாவட்ட அளவில்  நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள லாம். போட்டிகளுக்கான நடுவர்களாக ஆசிரியர்கள் செயல்பட்டனர்.