நியாய விலை கடையில் நடக்கும் சீர்கேடுகளை கண்டித்தும், பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்களை தடையின்றி மாதா மாதம் வழங்கவும் வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் உணவு வழங்கல் துறை திருவொற்றியூர் மண்டல அலுவலகம் அருகே தலைவர் அலமேலு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் எஸ்.பாக்கியம், மாவட்ட நிர்வாகி எஸ்.செல்வகுமாரி, பகுதிச் செயலாளர் கஸ்தூரி ஆகியோர் பேசினர்.