districts

மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை வழங்குக!

தஞ்சாவூர், ஜூன் 10-  மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை உடனடியாக  விடுவிக்க கோரி, சேது பாவாசத்திரம் ஒன்றியம், சிஐ டியு மீனவர் சங்கம் சார்பில், செந்தலைப்பட்டினம் பேருந்து நிறுத்துமிடம் அருகே புதன்கிழமை (ஜூன்  12) காலை 11 மணிக்கு சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது.  ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 முதல் ஜூன்  14 வரை 61 நாட்களுக்கு  கிழக்கு கடற்கரை பகுதி களில் மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்படுகிறது. மீன்பிடி தடைக் காலத்தில் மீனவர்களுக்கு தமிழ்நாடு அரசு மீன் வளத்துறை சார்பில் ரூ.8,000 நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது.  இந்நிலையில், தஞ்சை மாவட்ட கடலோர கிராமங்க ளில் மீன்பிடித் தொழில்  செய்து வரும் பட்டுக் கோட்டை, சேதுபாவா சத்திரம் ஒன்றியங்களில் 500-க்கும் மேற்பட்ட மீனவர்  குடும்பங்களுக்கு, அரசு அறி வித்துள்ள ரூ.8,000 நிவா ரணத் தொகை இதுவரை வழங்கப்படவில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட துறை  அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் உரிய நடவ டிக்கை எடுக்கவில்லை என  மீனவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.  இதனைக் கண்டித்து ஜூன் 12 அன்று காலை 11  மணியளவில், கிழக்கு கடற் கரைச் சாலையில் செந்த லைப்பட்டினம் பேருந்து நிறுத்தத்தில், சிஐடியு மீன வர் சங்கம் சார்பில், சகா புதீன் தலைமையில் சாலை  மறியல் நடைபெற உள்ளது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி, ஒன்றியக் குழு  உறுப்பினர் பி.பெரி யண்ணன், வழக்குரைஞர் வீ.கருப்பையன், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப் பினர் ஆர்.மனோகரன் மற்றும் திரளான மீனவர் கள் பங்கேற்பர் என தெரி விக்கப்பட்டுள்ளது.

;