districts

மண்ணியாற்றுக்கு வடிகால் வசதி செய்து தருக கோவிந்த நாட்டுச்சேரி மக்கள் கோரிக்கை

பாபநாசம், ஜுலை 3-

     தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே கொள்ளிடக் கரையோரமுள்ள கோவிந்த நாட்டுச்சேரி ஊராட்சியைச் சேர்ந்த கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு விடுத்துள்ள கோரிக்கை வருமாறு:

     கோவிந்த நாட்டுச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட பட்டுக்குடி, கூடலூர், புத்தூர் கிராமங் களில் சுமார் 500 ஏக்கருக்கு மேல் பாசன  நிலங்கள் உள்ளன. கொள்ளிடம் ஆற்றில்  வெள்ளப்பெருக்கு  ஏற்படும் காலங்களில், தூரியாறு வழியாக விவசாய நிலங்களுக் குள் வெள்ளநீர் புகுந்து பயிர்கள் சேதமா கின்றன. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்கிறோம். எனவே தூரி யாற்றிலிருந்து, மண்ணியாற்றுக்கு வடிகால்  வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்.  

   குடிகாடு கிராமத்திலிருந்து, அம்மாப் பள்ளி தைக்கால் செல்லும் வழியில் இருக்கும்  வடிகால் வாய்க்காலுக்கு மண்ணியாற்றின் கரை வரை தடுப்புச் சுவர் அமைத்துத் தர  வேண்டும். குடிகாடு, பட்டுக்குடி, கூடலூர்,  புத்தூர் உள்ளிட்ட கிராம மக்கள், வெள்ளப் பெருக்கு ஏற்படும் காலங்களில் தங்கு வதற்கு வசதியாக பேரிடர் பாதுகாப்பு மையம்  அமைத்துத் தர வேண்டும்.

   கூடலூர் கிராமத்திலிருந்து, பெருமாள் கோவில் ஊராட்சியை இணைக்கும் வகை யில் இணைப்புச் சாலை அமைக்க வேண்டும்.  கொள்ளிடம் ஆற்றங் கரையோரம் கல்லணை-அணைக்கரை இடையேயுள்ள சாலை குண்டும் குழியுமாக போக்கு வரத்திற்கு பயனற்ற நிலையில் இருக்கிறது. இந்தச் சாலையை சீரமைக்க வேண்டும் என  வலியுறுத்தியுள்ளனர்.