districts

புலிவலம் அரசுப் பள்ளிக்கு அடிப்படை வசதிகளை செய்து தருக!

திருவாரூர், ஜூலை 9 -

    திருவாரூர் ஒன்றியம் புலிவலத்தில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளி அடிப்படை வசதிகளின்றி, சுகா தார குறைபாடுகள் நிறைந்ததாக உள்ளது. எனவே பள்ளியை ஆய்வு செய்து மேம்படுத்த வேண்டும் என  சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தர மூர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

   திருவாரூர் அருகே புலிவலத்தில் உள்ள இப்பள்ளியில் 600-க்கும் மேற்பட்ட  மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இதில் சத்துணவு சாப்பி டும் மாணவர்கள் மட்டும் 250 பேர் உள்ளனர்.

    இந்நிலையில் கடந்த ஜூலை 6 அன்று பள்ளியில் மதியம் உணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகள் 11  பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள் ளது. இதையடுத்து அவர்கள் திருவா ரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து அறிந்த சட்டமன்ற உறுப்பினர் பூண்டி  கே.கலைவாணன், ஊராட்சி ஒன்றியத் தலைவர் தேவா மற்றும் மாவட்ட வரு வாய் அலுவலர் சங்கீதா, முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, மாவட்ட  கல்வி அலுவலர் மாதவன் உள்ளிட் டோர் மாணவர்களை சந்தித்து நலம் விசாரித்தனர்.

    பாதிக்கப்பட்ட மாணவர்கள் 2 நாள்  சிகிச்சைக்குப் பின் தற்போது வீடு திரும்பியுள்ளனர். மாணவர்கள் வீட்டிற்கு வந்தாலும், மாணவர்களின் பெற்றோர்கள் இந்த பாதிப்பில் இருந்து முழுமையாக மீளவில்லை. சம்பவம் நடைபெற்ற அரசு மேல் நிலைப் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் மாதேஷ்-ன் தாத்தா  சிபிஎம் புலிவலம் ஒன்றியக் குழு உறுப் பினர் பாலு ஆவார்.

    இவர் கைப்பேசி வாயிலாக சிபிஎம்  மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ண னிடம் பள்ளியில் நடந்த சம்பவங்களை தெரிவித்துள்ளார். இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை புலிவலத்தில் உள்ள மாணவரின் இல்லத்திற்கு சென்ற சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, மாணவரிடம் நலம் விசாரித்தார்.

    இச்சம்பவம் சாதாரண நிகழ்வாக இருந்தாலும், புலிவலம் அரசு மேல் நிலைப் பள்ளியில் போதிய கழிவறை கள், சத்துணவு கூடத்திற்கு தேவை யான இடவசதி இல்லை என்பது தெரிய  வருகிறது. எனவே மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற வகையில், சுகாதாரமான முறையில் சத்துணவு கூடங்கள் மற்றும் கழிவறைகளை அமைத்து, பள்ளிக்கு தேவையான அடிப் படை வசதிகளை செய்து தர வேண்டும்  என்பது பெற்றோரின் கோரிக்கை.

   புலிவலம் அரசுப் பள்ளிக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்துத் தர உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.