districts

      தஞ்சாவூர் மாணவர்களுக்கு பரிசளிப்பு

பேராவூரணி, ஆக.16-

      தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி டாக்டர் ஜே.ஸி.குமரப்பா கல்விக் குழுமம் சார்பில், பள்ளி வளாகத்தில் சுதந்திர தின விழா நடைபெற்றது. குமரப்பா கல்விக் குழும தலைவர் முனைவர் ஜி.ஆர். ஸ்ரீதர் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சுப.சேகர்  தேசியக் கொடி ஏற்றி வைத்தார். சுதந்திர தின விழாவை யொட்டி நடைபெற்ற போட்டியில், வெற்றி பெற்ற மாணவ,  மாணவிகளுக்கு குமரப்பா கல்விக் குழும பொருளாளர் பொறியாளர் எஸ்.அஸ்வின் கணபதி பரிசு வழங்கிப் பாராட்டிப் பேசினார்.