districts

ஆட்சியர் அலுவலகத்தில் கர்ப்பிணி தர்ணா

புதுக்கோட்டை, ஜூலை 17-

     கணவரை பிரிந்து வாடும் எட்டு மாத கர்ப்பிணிப் பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே சங்கம் தெருவைச் சேர்ந்தவர் பஷீராபானு. இவரது கணவர் நூர்முகமது. பஷீராபானு எட்டுமாத கர்ப்பிணியாக உள்ளார்.

    இருவருக்கும் ஏற்பட்ட குடும்பப் பிரச்சனை காரணமாக, கடந்த பிப்ரவரி மாதம் முதல் கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கணவர் நூர்முகமது விவாகரத்துக் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

     இதுதொடர்பாக பஷீராபானு காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்தும், காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததோடு, போலீசார் விவகாரத்துப் பத்திரத்தில் கையெழுத்துப் போடும்படி மிரட்டுவதாகவும் கூறினார். மேலும், கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் அடித்துத் துன்புறுத்துவதாகவும் தெரிவித்தார்.

   இதனைத் தொடர்ந்து, தனக்கு நியாயம் கிடைக்க கோரி திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்ணீருடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.