திருவாரூர், டிச.4 - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் திருவாரூர் மாவட் டம் குடவாசல் கிளை சார்பாக சுதந்திரப் போராட்ட வீரர் தோழர் என்.சங்கரய்யா நினை வேந்தல் மற்றும் கவிஞர் தமிழ்ஒளி நூற் றாண்டு நினைவு கருத்தரங்கம் நடை பெற்றது. குடவாசல் பேரூராட்சி சமுதாயம் கூடத்தில் ஞாயிறன்று நடந்த நிகழ்ச்சிக்கு குடவாசல் கிளைத் தலைவர் பா.கலை வாணன் தலைமை வகித்தார். செயலாளர் எஸ்.நீதிராஜன் வரவேற்றார். அமைப்பின் மாவட்டத் தலைவர் மு.சௌந்தரராஜன், செயலாளர் ஜி.வெங்கடேசன் மற்றும் திமுக தலைமை குழு உறுப்பினர் ஆர்.முருகே சன், பேரூராட்சி துணைத் தலைவர் என். குணசேகரன் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். ‘கவிஞர் தமிழ் ஒளி-வாழ்வும் கலை இலக்கியப் பணியும்’ என்ற தலைப் பில் அமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினரும், எழுத்தாளருமான புதுக் கோட்டை ஸ்டாலின் சரவணன் கருத் துரை ஆற்றினார். ‘பொதுவுடைமை வரலாற்றில் தோழர் சங்கரய்யா’ என்ற தலைப்பில் சிபிஎம் மாவட்டச் செயலா ளர் ஜி.சுந்தரமூர்த்தி உரையாற்றினார். முன்னதாக தோழர் என்.சங்கரய்யா உருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப் பட்டது. சங்கரய்யாவை நினைவு கூர்ந்து கவிதை வாசிப்பு, பாடல்கள் இயற்றப்பட்டன. இதில் தமுஎகச கிளை துணைத் தலை வர் ஆசிரியர் மு.சுந்தரையா, கிளைச் செய லாளர் பா.சுகதேவ், கிளை உறுப்பினர்கள், கலை ஆர்வலர்கள், மாதர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். லெனின் பாரதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். துணைச் செயலாளர் ஏ.தௌலத் அகமது நன்றி கூறினார்.