பெரம்பலூர் மே 21- பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் பணியாற்றவுள்ள பணியா ளர்களுக்கான இணைய வழியில் கணினி முறை குலுக்கல் மூலம் பணி ஒதுக்கீடு செய்திடும் நிகழ்வு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் கலெக்டருமா கிய க.கற்பகம் தலைமை யில் 21.05.2024 அன்று நடை பெற்றது. பெரம்பலூர் நாடாளு மன்றப் பொதுத்தேர்த லுக்கான வாக்கு எண்ணும் மையமான ஆதவ் பப்ளிக் பள்ளியில் 04.06.2024 அன்று வாக்கு எண்ணிக்கை நடை பெறவுள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில், வாக்கு எண்ணும் பணிக் காக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தலா 14 மேசைகள் பயன்படுத்தப்பட வுள்ளது. வாக்கு எண்ணும் பணிக்கு ஒவ்வொரு சட்ட மன்ற தொகுதிக்கும் மேற் பார்வையாளர்கள் Super visors for Assembly Cons tituency தலா 17 நபர் களும் , உதவி அலுவ லர்கள் (Assistant Super visors) தலா 17 நபர்களும் மற்றும் நுண பார்வை யாளர்கள் (Microsco pers) தலா 17 நபர்களும் என மொத்தம் 306 நபர்கள் நியமனம் செய்திட முதற் கட்டமாக கணினி (Early computer) மூலம் மூன்று வகையருக்கான பணி ஒதுக்கீடு செயவதற்காக குலுக்கல் நடைபெற்றது. இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல்பிரபு , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வைத்தியநாதன் , மாவட்ட ஆட்சி யரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்கள்) விஜயா, தேர்தல் வட்டாட்சியர், மற்றும் துணை வட்டாட்சி யர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.