districts

திருச்சியில் ஓய்வூதியர் நாள் சிறப்பு கருத்தரங்கம்

திருச்சிராப்பள்ளி,டிச,19- தமிழ்நாடு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கங்க ளின் கூட்டமைப்பு சார்பில்  ஓய்வூதியர் நாள் சிறப்பு கருத்தரங்கம்  வியாழனன்று திருச்சியில் நடைபெற்றது.  கருத்தரங்கிற்கு கூட்டமைப்பு மாவட்ட தலைவர் சிராஜுதீன் தலைமை வகித்தார். பல்வேறு ஓய்வூதியர் சங்கங்களின் நிர்வாகிகள் ராஜேந்திரன்,  எம்.வி .செந்தமிழ் செல்வன், சுடலை யாண்டி, ராமதாஸ், தங்கவேலு,  பஷீர்,  தியாகராஜன் ஆகி யோர் பேசினர்.  அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க  மாநில பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி சிறப்புரை யாற்றினார். அவர் பேசுகையில், இந்தியா முழுவதும் 31.7.2024 கணக்கின்படி 99,77, 165 ஊழியர்களிடமி ருந்து பிடித்தம் செய்யப்படும் சந்தா தொகை ரூ 10,53,850 கோடியை பங்கு சந்தையில் முதலீடு செய்ய ஒன்றிய அரசு உத்தேசித்துள்ளது. புதிய ஓய்வூதியத் திட்டத்தில் 60 சதவிகிதம் அரசு ஓய்வூதியம் மற்றும் 40 சதவிகிதம்  பங்கு சந்தையுடன் இணைப்பது என்ற அடிப்படையில் உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்படுகின்ற ஓய்வூதிய மாகும். யுபிஎஸ் திட்டத்தில் 40 சதவீதம் என்ற பாதுகாப்பை நீக்கி முழுமையும் பங்கு சந்தையில் ஈடுபடுத்துவது என்பது சூதாட்டம் ஆகும். ஒன்றிய, மாநில அரசு ஊழியர்களின் ஒருங்கிணைப்புக்குழு யுபிஎஸ் திட்டத்தை ஏற்க முடியாது என்றும் இது ஒரு கண்துடைப்பு என்றும் பழைய ஓய்வூதி யத் திட்டத்தை மீண்டும் அறிவிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளது. இன்னொருபுறம் ராஜஸ்தான், ஜார்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய மாநி லங்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துள்ள நிலையில் ஒன்றிய அரசின் ஓய்வூதிய ஆணையத்திற்கு இந்த மாநில அரசுகள் வழங்கிய சந்தா தொகையை திரும்ப பெற்று பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவரும் பொருட்டு இந்த நிதியினை அளிக்கு மாறு மாநில அரசுகள் கேட்டுள்ளன. ஆயினும் ஒன்றிய அரசு இது நாள் வரை தரமுடியாது என்று மறுத்து வருகிறது வருங்கால சந்ததியினருக்கு இந்த உரிமைகளை பெற்றுத் தருவதற்கும் போராட்டத்தினை முன்னெடுத்துச் செல்வது நமது கடமை என்று கூறினார். பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.