தஞ்சாவூர், ஜூலை 14 -
அசோகன் தங்க மாளிகை நகைக் கடையில் பணம் செலுத்தி ஏமாந்தவர் கள் புகார் அளிக்கலாம் என தஞ்சாவூர் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரி வித்திருப்பதாவது:
“தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக் கோட்டையில் செயல்பட்டு வந்த அசோ கன் தங்க மாளிகை நகைக் கடையில், பொது மக்களிடமிருந்து பல்வேறு முத லீட்டுத் திட்டங்களில் பணமாகவும், நகைகளாகவும் பெற்று அவற்றை திருப்பித் தராமல் ஏமாற்றி விட்ட தாக, பட்டுக்கோட்டை தாலுகா, பள்ளி கொண்டான், வடக்குத் தெருவைச் சேர்ந்த ஜெமிலா வெற்றிக்கொடி என்ப வர் புகார் கொடுத்தார்.
இந்த புகார் சம்பந்தமாக பட்டுக் கோட்டை நகர காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மேற்படி வழக்கானது தஞ்சாவூர் மாவட்ட குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. தற்போது தஞ்சாவூர் பொருளாதார குற்றப்பிரி வில் குற்ற எண் .01/2023 ச/பி 406,420 120(B) IPC r/w 34 IPC ன் படி வழக்கு மாற்றம் செய்யப்பட்டு புலன் விசாரணையில் இருந்து வருகிறது.
இந்நிலையில், மேற்படி அசோகன் தங்க மாளிகை நகைக் கடையை தலை மையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த, தஞ்சாவூர் மற்றும் அதன் கிளை களான ஒரத்தநாடு, திருக்காட்டுப்பள்ளி மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய இடங் களிலும், பொதுமக்கள் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டுள்ளதாக புலன் விசார ணையில் தெரிய வருகிறது.
எனவே இவ்வழக்கில் மேற்படி அசோ கன் தங்க மாளிகை நகைக் கடைகளில் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த முதலீட்டாளர்கள் முதலீடு செய்து, முத லீட்டு தொகைகள் மற்றும் தங்க நகை கள் திருப்பி தரப்படாமல் ஏமாற்றப்பட்டி ருந்தால், அவர்கள் தஞ்சாவூர், மருத்துவ கல்லூரி சாலை, 57-பி, ராஜப்பா நகர், முதல் தெருவில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவல கத்தில் உரிய ஆவணங்களுடன் ஆஜ ராகி புகார் அளிக்கலாம்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.